நம்மால் முடியும் !
15-ஆம் பொது தேர்தல் நம்பிக்கை வாக்குறுதி
சுகாதாரம், வேலைவாய்ப்பு, உணவு மற்றும் கல்வி ஆகிய பல்வேறு நிலைகளங்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும் மலேசியாவை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு தலையாய நோக்கத்தை நம்பிக்கை கூட்டணி கொண்டுள்ளது.
30 மாதங்களாக நாட்டை நிர்வகித்த தேசிய முண்ணனி (BARISAN NASIONAL) மற்றும் தேசிய கூட்டணி (PERIKATAN NASIONAL) அரசுகளின் நிலையற்ற தலைமைத்துவம் மற்றும் முரண்பட்ட அரசியல் கொள்கைகளின் விளைவால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர் என்பது நிதர்சனம். மேலும், பின் தங்கிய ஒரு தலைமுறையின் (lost generation) சவால்களை சற்றும் பொருட்படுத்தாததோடு குமுகாய மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றங்களால் வரும் சிக்கல்களே அதிகரித்து வருகின்றன.
நம்பிக்கை கூட்டணியானது மலேசியாவை ஒரு வளப்பமான, அதிக திறமைகள் மிகுந்த, சுபிட்சமான மற்றும் நன்னெறிகளான மரியாதை மற்றும் மனிதாபிமானம் நிறைந்த ஒரு நாடாக உருவாக்கும் கடப்பாட்டினை கொண்டுள்ளது
நம்பிக்கை கூட்டணியின் வாக்குறுதிகளானவை, நம் அனைவரின் ஒருமித்த முயற்சியின் விளைவாக மலேசியாவிற்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கும் உயரிய கடப்பாட்டை முதன்மையாக கொண்டு கீழ்கானும் மூன்று நோக்கங்களை அடைவதற்காக வரையறுக்கப்பட்டவையே ஆகும்.
- நம்மால் நாட்டு மக்களின் வளப்பத்தை உறுதி செய்ய முடியும்- நாட்டு மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு சீரான பொருளாதாரத்தை வளர்த்தல்.
- நம்மால் கண்ணியமிக்க நிர்வாகத்தை உறுவாக்க முடியும்- அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த இயலும்.
- நம்மால் இந்நாட்டினை எதிர்காலத்திற்கு ஏற்ப தயார் செய்ய முடியும்- பருவநிலை மாற்றம், தேசிய ஒருமைப்பாடு, மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்கு மக்களை தயார் செய்ய முடியும்.
நம்மால் மலேசியாவை புதிய தலைமுறையினருக்காக மீட்டெழுப்ப முடியும் என்பதோடு மீண்டும் ஒரு முறை நம் தாய்த்திருநாட்டிற்காக வெற்றி வாகை சூடிடுவோம் !
#KitaBoleh #MalaysiaBangkit