வாழ்க்கை செலவீனங்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாளுதல்

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு மலேசியர்கள் வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 2.1%-இல் இருந்து 3.1% அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கமானது நாட்டில் ஏற்பட்டுள்ள சந்தை தேவை (demand), அடிப்படை பொருட்களின் (commodity) விலையேற்றம் மற்றும் வழங்கீட்டுச் சங்கிலியில் ஏற்படும் குறைப்பாடுகள் (disruption of supply chain) ஆகியவற்றின் மூலமாகவே ஏற்படுகிறது.

இவ்வாறான வாழ்க்கை செலவீன அதிகரிப்பு சிக்கல்களை களைவதற்கு நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படுவது அவசியமாகிறது. பணவீக்கம் நாட்டின் தற்போதைய சந்தை நிலையை பொறுத்து அமைந்திருந்தாலும், நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தும் அரசாங்கம் கண்டிப்பாக பணவீக்கத்தை குறைக்கும் அல்லது மக்களின் பணச்சுமையை குறைக்கும் தேசிய திட்டங்களை அமல்படுத்த இயலும். நம்பிக்கை கூட்டணியானது இவ்வாறான வாழ்க்கை செலவீனங்களின் மூலம் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைவதற்கு குறுகிய கால திட்டங்களை அமல்படுத்தாமல் நீண்ட கால தீர்வை வழங்க முணைப்பு கொண்டுள்ளது.

ஏகபோக வணிக முதலைகளை (Cartel) துடைதொழித்தல்

உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான துறைகளில் ஏகபோக வணிக முதலைகளை துடைத்தொழிப்பதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக அல்லது நியாயமற்ற வருவாய்ஈட்டுவதை (excessive profiteering) தவிர்க்க இயலும். இவ்வாறு ஏகபோக வருவாய் ஈட்டும் வணிக முதலைகள் இல்லாத பட்சத்தில் புதிய வணிகர்களை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான துறைகளில் ஈடுபடுத்த முடியும்.

சந்தையில் தேவையான அளவு பண்டங்கள் இருத்தலை உறுதிசெய்தல்

சந்தையில் தேவையான அளவுக்கு ஏற்ப பொருட்கள் இருத்தலை உறுதிசெய்ய உற்பத்தியாளர்களுடன் நல்லுறவை பேணுவது அவசியம். குறிப்பாக பண்டிகை காலங்களில், சந்தையில் பொருட்கள் பற்றாக்குறையின் காரணமாக அவற்றின் விலை அதிகமாக உயரும் பட்சத்தில் இம்முயற்சியானது மென்மேசும் அவசியமான ஒன்றாக இருக்கும். 

ஊக்கத் தொகைகள்  மூலம் உற்பத்தியை அதிகரித்தல்

நிறைவான ஊக்கத்தொகைகள் வழங்குவதன் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதோடு அவற்றின் விலையையும் குறைக்க இயலும்.

நாட்டின் நெடுங்சாலை கட்டணங்களை மறுசீராய்வு செய்தல்

முந்தைய நம்பிக்கை கூட்டணி அரசு நெடுஞ்சாலை கட்டணங்களை மறுசீராய்வு செய்து 18% வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (PLUS) மற்றும் கிழக்கு கரை 2-ஆம் கட்ட நெடுஞ்சாலை (LPT2) சுங்கச்சாவடி கட்டணங்களை குறைத்து மக்களுக்கு சிறந்த பணியை செய்தது நாட்டில் நெடுஞ்சாலை கட்டணங்களை மறுசீராய்வு செய்வதன் மூலம் சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்கலாம். இதன் மூலம் மக்களின் அன்றாட செலவை குறைக்க இயலும்.

இந்தக் கட்டுரையைப் பகிர: