பேரிடர் கால எதிர்கொள்ளும் நிலைத்தன்மையை உறுதிசெய்தல்

நாட்டில் நிகழ்ந்த மிகவும் மோசமான ஒரு வெள்ளப் பேரிடரைக் கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கண்டுள்ளோம். இயற்கையின் இந்தச் சீற்றத்தினால் 54 உயிர்கள் பலியானதுடன் 2 உயிர்களைக் காணவில்லை. ஏறத்தாழ 71,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளப் பேரிடரால் தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளனர். மேலும், 125,000 மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேதத்தின் மதிப்பு சுமார் ரி.ம 6.5 பில்லியனை நெருங்கும்.

இந்தச் சம்பவம் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அதன் நெருக்கடிகளையும் நமக்கு நினைவுறுத்தியுள்ளது. ஆகையால், இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள நாடு எப்போதும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இயற்கையின் சீற்றத்தினால் ஏற்படும் நிகழ்வுகளை நாம் ஒருபோதும் தடுக்க இயலாதுதான். ஆனாலும், அதனால் நிகழும் பாதிப்புகளில் இருந்து நாம் நம்மை தர்காத்து கொள்ளலாம். நம்பிக்கை கூட்டணி இனியும் இது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஏற்படும் பாதிப்புகளை குறைத்து மக்கள் நலனைக் காக்கும் என்று உறுதி கொண்டுள்ளது.

கட்டமைப்பு திட்டங்களும் நிலையான வளர்ச்சியும்

வெள்ளப் பெருக்கைத் தவிர்க்கும் வகையில் கட்டமைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதிகமாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், வெள்ளத்தைத் தவிர்ப்பதோடு சுற்றுசூழலையும் பாதுகாக்க முடியும்.

தேசிய இயற்கை பேரிடர் பாதுகாப்பு திட்டம்

இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்குத் அவர்களின் சேதாரங்களின் மதிப்பை பொருத்து அதிகப்பட்சமாக தலா ரி.ம 50,000 வரை நஷ்ட ஈடு வழங்கப்படும்.

NADMA நிறுவனத்தை வலுப்படுத்துதல்

NADMA எனப்படும் வெள்ள பேரிடர் நிர்வாக அமைப்பின் கட்டமைப்பை மறுபரிசீலனைச் செய்வதன் வழி நிகழவிருக்கும் இயற்கை பேரிடரில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம்.

வெள்ளம் & இயற்கை பேரிடரில் இருந்து தற்காக்கும் தயார்நிலை

இயற்கை & வெள்ளப் பேரிடரில் இருந்து மக்களைப் பாதுகாக்க முறையான கட்டமைப்பும் முறையான நிதிகள் ஒதுக்கப்பட்டு வழங்கப்படும். இதன் வழி, பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஏற்ற உதவியைச் செய்ய முடியும். அதே வேளை இவ்வாறான பேரிடர் பொழுதுகளில் அரசு துறைகளின் அனைத்து மட்டத்திலும் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து செயலாற்றுவதும் சரியான திட்ட வரைவுகளின் மூலம் உறுதி செய்யப்படும். வெள்ள பேரிடர் உதவிகளில் பின்தங்கிய மக்கள், ஊனமுற்றோர், மற்றும் முதியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்ளப்படும். 

இந்தக் கட்டுரையைப் பகிர: