இணைய வேகத்தை அதிகரித்தல்

இன்றைய நாளில் அதிவேக அகன்ற அலைவரிசை இணையமானது நாட்டின் சமுதாய மற்றும் எண்மிய பொருளாதார வளர்சிக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அதிவேக இணையம் மூலம் நம்மால் காணொலிகளை தடையின்றி ஸ்ட்ரீமிங் செய்ய முடிவதோடு, மின்- வர்த்தக துறையிலும் ஈடுபட முடிகிறது.

அகன்ற அலைவரிசை இல்லாமல் நம்மால் internet-of-things (IOT) மற்றும் தன்னியக்கம் IR4.0 போன்ற நவீன புத்தாக்கங்களை பயன்படுத்தவே இயலாது. இவ்வாறு, அதிவேக மற்றும் தரமான இணையத்தை நமக்கு கிடைக்க செய்யாமல் இருப்பின் குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகம் (PMKS) மற்றும் உயர்சிந்தனை திறன் படைத்த வர்த்தர்களையும் அதிகமாக இழக்கும் சூழல் நேரிடும். இவர்களின் வர்த்தகத்தை நம்மால் உலகளாவிய நிலைக்கு எடுத்து செல்ல அதிவேக இணையமே அன்றி  வேறு வழிவகை இல்லை.

இணைய வறுமையை துடைத்தொழித்தல்

சபாவின் பிடாஸைச் (Pitas) சேர்ந்த வெவோனா மோசிபின் எனும் மாணவி தனது பள்ளித் தேர்வுகளை செய்து முடிக்க சிறந்த இணைய அணுகலைப் பெற ஒரு மரத்தில் தனது இரவைக் கழிக்க வேண்டியிருந்தது குறிப்பித்தக்கது. ஜோகூரில் உள்ள பெக்கோக்கைச் (Bekok) சேர்ந்த பழங்குடியின தாயார் ஒருவரான மெரினா ஜிதா, கோவிட் பெருந்தொற்றின் போது இயங்கலை கற்றலுக்காக சீரான இணையத்தை அணுகுவதற்காக தனது குழந்தைகளை காட்டுப்பாதை வழியாக 15 கி.மீ. மோட்டார் சைக்கிளில் ஒரு செம்பனை தோட்டத்தின் நடுவில் உள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான எண்மிய இடைவெளி வேறுபாடு மிகவும் நிதர்சனமான உண்மையாகும். உண்மையில், நகர்ப்புற மலேசியாவில் உள்ள பெரும்பாலான சமூகங்களில் தரமான இணைய சேவைகளுக்கான அணுகல் இன்னும் சீரற்றதாகவே உள்ளது. இணைய வறுமையை முடிவுக்குக் கொண்டுவர மலேசியா முழுவதும் வேகமான இணைய அணுகலைக் கொண்டுவருவதே இப்போது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அனைவருக்குமான இணைய சேவை மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றிற்கு மற்ற அமசங்களை விட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

தகவல் மையத்துறை வளர்ச்சி (Pusat Data)

தரவு மையங்கள் ஏற்கனவே உலகளவில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் இயங்கும் ஒரு மாபெரும் தொழில்துறையாகும். மலேசியாவின் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே அமையப்பெற்ற மிகவும் நூதனமான பூலோக இருப்பிடம், தரவு மையங்களை உருவாக்க விரும்பும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மலேசியாவை ஒரு கவர்ச்சிகரமான இடமாக பரிணமிக்க செய்து அவர்களை ஈர்க்கவல்லது என்பது திண்ணம். இதன் மூலம், அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மலேசியாவை ஒரு மத்திய பிராந்திய தரவு மையமாக (Hab Serantau Pusat Data) மாற்றுவது, அனைத்து மலேசியர்களுக்கும் உயர்தர இணைய சேவைகள் இலகுவாக கிடைத்திட வழிவகுக்கும் என்பது வெள்ளிடைமலை.

இந்தக் கட்டுரையைப் பகிர: