உணவு பாதுகாப்பை உறுதி செய்தல்

வெள்ளப் பேரிடர் மற்றும் குறைந்த உற்பத்தி காரணமாக நம் நாட்டில் பலமுறை மிக மோசமான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குறைந்த அளவிலான உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அதிகமான விலை ஏற்றம் மட்டுமின்றி நாட்டில் ஊட்டச்சத்து குறைப்பாடும் அதிகரிக்கும்.

உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் என்பது வெறும் தேவையான உணவு உற்பத்தியை நிலைப்பெற செய்வது மட்டுமில்லாமல் விவசாயி, மீனவர் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செய்யப்படும் ஒரு திட்டம் ஆகும். நம்பிக்கை கூட்டணி மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தை மலேசியர்களுக்கு வாக்குறுதியாக முன் முன்நிறுத்துகிறது.

உணவு பாதுகாப்ப

விவசாய நில சீர்திருத்தம் – தேசிய நில மன்றம் மூலமாக இச்சீர்திருத்த்ததை நம்மால் மாநில அரசின் துனையுடன் செய்து முடிக்க இயலும் என்பதோடு விவசாயி மற்றும் கால்நடை வளர்ப்போர் சுலபமாக நிலங்களை பெற ஏதுவாக வழிவகை செய்ய இயலும்.

நவீன விவசாயம்- இலகுவான கடனுதவி மூலம் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை விவாசய துறையில் நம்மால் ஈடுபடுத்த இயலும் என்பதோடு விவசாயம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளையும் புத்தாக்கங்களையும் (Research & Development) நம்மால் ஊக்குவிக்க முடிவதோடு அவற்றை சந்தைப்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படும்.

மலேசியாவை விவசாய ஏற்றுமதி நாடாக உருவாக்குதல்- விவசாயிகளின் வருவாயை பெருக்கும் முயற்சியாக நம் நாட்டு உற்பத்தியில் விளையும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். மலேசிய விளைப்பொருட்களை உலகளாவிய சந்தைக்கு விரிவுப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

இளைய விவசாய வணிகர்கள் மற்றும் முதலீட்டை ஈர்த்தல்- விவசாயத் துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் அல்லது சிறுதொழில் உழவர்களுக்கு வரி விலக்கு செய்ய வழிவகைகள் செய்யப்படும். இளைய விவசாய வணிகர்களின் திறமையை ஊக்குவிப்பதோடு அவர்களின் திறனுக்கு ஏற்ப ஏதுவான விவசாயத் துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயி, மீனவர் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலன்

நாம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் விவசாயி, மீனவர் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் நல திட்டங்களை விரிவுப்படுத்த இயலும்.

மானியத்தொகைகல் விவசாய முதற்பொருட்களுக்கு (Input) வழங்கப்படுவதை விட படிப்படியாக விளைப்பொருட்களுக்கு (Output) வழங்கும் வகையில் மாற்றம் செய்ய வழிவகை செய்யப்படும். மானியத்தொகைகளை அதிகரித்தல் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். நம்பிக்கை கூட்டணியானது நெற்பயிர்களுக்கு வழங்கும் மானியத்தொகையை [Skim Subsidi Harga Padi (SSHP)] ஒரு டன் கணக்கில் ரி.ம 360 -இல் இருந்து ரி.ம 500 ஆக அதிகரிக்க திட்டம் கொண்டுள்ளது. மானிய அட்டை (Kad Subsidi) அல்லது மின்னியல் பரிவர்த்தனை செயலி (e-wallet) ஆகியவை விவசாயிகள் சுயமாக தங்களின் விவசாய முதற்பொருட்களை வாங்குவதற்காக அறிமுகம் செய்யப்படும்.

இந்தக் கட்டுரையைப் பகிர: