இன்றைய டிஜிட்டல் உலகில் ‘கச்சா எண்ணெய் விலையை விட தரவுகள் இன்னும் விலைமதிப்பு மிக்கது’ எனும் தற்போதைய காலக்கட்டத்தில், தேசிய முன்னனியின் கீழ் உள்ள நடப்பு அரசாங்கம் இன்னும் ‘அரசாங்கத்திற்கு எல்லம் தெரியும்’ (government knows best) என்ற மமதையில் உள்ளது. இத்தகைய நிர்வாகக் கலாச்சாரம் காலாவதியானது மட்டுமின்றி மலேசியா மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் முற்றிலுமாக நிலைக்குழைய செய்துள்ளது.
நம்பிக்கை கூட்டணியின் கொள்கை தத்துவம் மாறுபட்ட ஒன்றாகும். இப்புதிய கொள்கை திசையானது திறந்த தரவு (Open data as default), டிஜிட்டல் வடிவமைப்பு, திறந்த நிர்வாகம் (open government) மற்றும் தரவுகளால் வழிநடத்தப்படும் (data-driven public sector) பொது சேவைத் துறையை உருவாக்க வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்
கையடக்க திறன்பேசி (smart phone) வழியாக முழு நிர்வாக சேவைகளயும் மக்கள் அனுக வழிவகை செய்யப்படும். அனைத்து அரசு சேவை சாவடிகளிலும் (JPJ, குடிநுழைவுத்துறை மற்றும் பிற) மக்கள் நீண்ட வரிசையில் நிற்காமல் எளிதாக அரசாங்க சேவைகளைப் பெற முடியும் வகையில் ஒருங்கிணைக்கப்பட முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பொது சேவைகள் ஒருங்கிணைப்பு
அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற பொதுச் சேவைகளை ஒருங்கிணைத்தல் அவசியம். இதன் மூலம் மக்கள் எளிதில் அரசாங்க அமைப்புகளின் சேவை அலுவலகங்களை நாட முடியும்.