இணைய வேகத்தை அதிகரித்தல்

இன்றைய நாளில் அதிவேக அகன்ற அலைவரிசை இணையமானது நாட்டின் சமுதாய மற்றும் எண்மிய பொருளாதார வளர்சிக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அதிவேக இணையம் மூலம் நம்மால் காணொலிகளை தடையின்றி ஸ்ட்ரீமிங் செய்ய முடிவதோடு, மின்- வர்த்தக துறையிலும் ஈடுபட முடிகிறது. அகன்ற அலைவரிசை இல்லாமல் நம்மால் internet-of-things (IOT) மற்றும் தன்னியக்கம் IR4.0 போன்ற நவீன புத்தாக்கங்களை பயன்படுத்தவே இயலாது. இவ்வாறு, அதிவேக மற்றும் தரமான இணையத்தை நமக்கு கிடைக்க செய்யாமல் இருப்பின் குறு, சிறு மற்றும் […]
சுகாதார சீர்திருத்தம்

பொது சுகாதாரம் என்பது மக்களின் நல்வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது. அனைவராலும் அணுகக்கூடிய நல்ல பொது சுகாதாரம் உள்ள நாடுகளில் ஒன்றாக மலேசியா சான்றளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய வளர்ச்சி மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது சுகாதாரப் பாதுகாப்புக்கான விதிமுறைகள் பெருகிய முறையில் நீட்டிக்கப்படுகின்றன. கோறனி நச்சில் பெருந்தொற்றுநோய் தாங்கும் ஆற்றலைச் சோதித்தது; பொது சுகாதாரத் துறையின் குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. சிகிச்சையகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான அணுகல் பெருகிய முறையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக் கூடங்களின் படுக்கையில் தங்கும் வீதம் கொள்ளளவைவிட […]
ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை காத்தல்

ஜனநாயகத்தின் முக்கியமான வழிகாட்டல்களில் ஒன்று ஊடகங்களின் ஆற்றலாகும். சுதந்திரமாகத் தற்போதைய பிரச்சினைகள் குறித்து சுயாதீனமாக புகார் கொடுப்பது பொது ஊடக சுதந்திரமாகும். அது பறிக்கப்படும்போது ஜனநாயகத்தின் முக்கியமான செயல்பாடு பாதிக்கப்படும். மோசமான விளைவுகள் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பசுத்துவதோடு சரியான தகவலையும் அணுக முடியாது. நம்பிக்கைக் கூட் டணி முக்கிய கோட்டைகளில் ஒன்றைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. ஊடக சுதந்திரம், பேச்சு உரிமை போன்றவைப் பாதுகாக்கப்படும். அடக்குமுறை சட்டத்தை ரத்து செய்தல் தேசத் துரோகச் சட்டம் 1948, தகவல் […]
நாட்டின் மக்களாட்சி முறையை பலப்படுத்துதல்

தேசிய முன்னனி மற்றும் தேசிய கூட்டனி நிர்வாகத்தின்போது மாறிவரும் அதிகாரப் போட்டிகள், குறிப்பாக தொற்றுநோய் இன்னும் அதிகரிக்கும்போது, பொதுமக்களிடையே அரசியல் சோம்பலை விளைவித்துள்ளது. எனினும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் முன்னேற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலம் ஜனநாயக அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். நாடாளுமன்றத்தின் சுதந்திரத்தை உறுதிசெய்து, அரசியல் கட்சிகளின் நிதியுதவியை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், நியாயமான மற்றும் நேர்மையான தேர்தல்களுக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை நம்பிக்கைக் கூட்டணி தொடரும். நாடாளுமன்றத்தின் […]
நாட்டின் முக்கிய அரண்களை சீர்திருத்துத்தி வலுவுற செய்தல்

ஒரு முழுமையான சமநிலை செயல்முறை இல்லாமல், தேசிய நிர்வாகம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு ஆளாக நேரிடும். இது அரசாங்கத்தின் சொத்து கொள்ளைப்போவதற்கு வழிவகுப்பதோடு சுயநல அரசியல்வாதிகள் பதவிகளுக்காகச் சண்டயிடுவது, அதிகாரத்தை மையப்படுத்துவது மற்றும் அதிகப்படியான செல்வத்தைக் கொள்ளையடிப்பது ஆகியவை நடக்கும். இது நாட்டிற்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தும். நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து நிர்வாக அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் மலேசியா நிர்வாக அமைப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதோடு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது சட்ட நிறுவனங்கள், மற்றும் நாட்டின் அரசியல் […]
கையூட்டு மற்றும் இலஞ்சத்தை ஒழித்தல்

நாட்டின் மிகப்பெரிய சாபமாகக் கருதப்படுவது கையூட்டு ஆகும். இது நாட்டின் சட்டத்துறை மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டுவதோடு, நாட்டின் மக்களாட்சியையும் நிலைகுழைய செய்யவல்லது. மக்களின் முயற்சியால் கடந்த 14-ஆம் பொதுத் தேர்தலின் போது ஊழல் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. இருந்தபோதிலும், தொடர்ந்து நடந்து வந்த அரசியல் குழப்பங்களினால், ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் பிடியில் நாடு மீண்டும் சிக்கியது. நாட்டு மக்களாகிய நாம், ஊழலை ஒழிக்க தொடர்ந்து போராட வேண்டும். நம்பிக்கை கூட்டணி, சுத்தமான மற்றும் கண்ணியமிக்க, ஊழலற்ற ஒரு […]
மாற்றுத் திறனாளிகளை அரவணைத்து காத்தல்

ஒட்டு மொத்த மலேசிய மக்கள் தொகையில் 15% மாற்றுத் திறனாளிகள் ஆவர். ஆகையால், நாட்டின் மேம்பாட்டிற்கு அவர்களை புறக்கணித்தலாகாது. உடலளவிலும் மனதளவிலும் இவர்கள் குறைபாடு கொண்டிருந்தாலும் நாட்டின் அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பங்களிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சுற்றுசூழல் அமைந்திருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கூட்டணி கவனம் செலுத்துகின்றது. இதன் வழி, மாற்றுத் திறனாளிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதில் இருந்து ஒதுக்கப்பட மாட்டார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பை நிறுவ […]
முதியோர் நலன் காத்தல்

தற்போது மலேசியாவில் வசிக்கும் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 75.6 ஆண்டுகளும் ஆகும். 60ஆம் ஆண்டில் பணிஓய்வு பெற்ற பிறகு, ஏறத்தாழ 10-15 ஆண்டுகள் வரை எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. முறையான சேமிப்பு இல்லாமல், வயதான காலத்தில் முதியவர்கள் நம் நாட்டில் பண நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். நம்பிக்கை கூட்டணி இச்சிக்கலை கருத்தில் கொண்டுள்ளது. இச்சிக்கலை நிச்சயமாக நம்மால் களைய முடியும் என்பதோடு மலேசியர்களுக்கு முதிய […]
மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டை வளப்படுத்துதல்

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பங்களுக்காகவும் அதிகமாக உழைக்கின்றனர்; தியாகம் செய்கின்றனர். இருப்பினும், இன்றளவும் கூட பெண்களுக்குப் பாலியல் சமத்துவம் வழங்கப்படுவதில்லை. அவர்களது உரிமைகளும் பரிக்கப்படுகின்றன. இச்சிக்கலைக் களைவதற்கு, பெண்களுக்குத் தேவையானவற்றை கொண்டு கொள்கைகள் நிறுவப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் நல்வாழ்வும் அதிகப்படியான பங்கை வகிக்கின்றது. பாலினச் சமத்துவ உள்ளடக்கம் (Inclusivity) பாலினச் சமத்துவமின்மையைச் களைவதற்கு, நாடாளுமன்றத்தில் படைக்கப்படும் சட்ட மசோதாகள் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு அவற்றை உள்ளட்டக்கிய ஒன்றாகவும் இருத்தலை […]
சிறார் நலனை பேணுதல்

2021ஆம் மக்கள் தொகையின் புள்ளிவிவரப்படி 18 வயதுக்கும் குறைவான சிறார்களின் எண்ணிக்கை சுமார் 9.13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிகை மொத்த மலேசிய மக்கள் தொகையில் 28% ஆகும். மொத்த மலேசிய தொகையில் 1/3 அளவிலான விகிதத்தில் இருக்கும் அவர்களுக்குக் கட்டாயம் பல முன்னுரிமைகள் வழங்கப்பட வேண்டும். சிறப்பான வாழ்க்கை முறையில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ எல்லா வகையிலும் சிறார்கள் தகுதியுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். குழந்தைகள் மற்றும் இளவயதினர்கள் தகுந்த முறையில் பாராமறிக்கப்பட்டால்தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக […]