மலேசியர்களின் வளமான வாழ்க்கை மற்றும் வளப்பத்தையும் உறுதிசெய்தல்

புவியியல் காரணிகள், சமூகப் பொருளாதார வர்க்கம், குடும்பப் பின்னணி மற்றும் இனம் அனைத்தும் ஒரு சமூகம் மற்றும் ஒரு நபரின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன. தற்போதுள்ள அமைப்பில் உள்ள இடைவெளி, இந்தச் சமூகங்களில் சிலவற்றின், குறிப்பாக இந்திய சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் ஒராங் அசால் சமூகங்கத்தினருக்கும் உண்டான அடிப்படை வசதிகள், தரமான கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் வசதியான வீடுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இடையீடுகளைச் செயல்படுத்தப்பட வேண்டும். தேசத்தின் செழுமையை அனுபவிப்பதில் யாரும் பின் தங்கிவிடக்கூடாது […]

நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் துறையை மேம்படுத்துதல்

அனைத்து முன்னேறிய நாகரிகங்களும் ஆக்கப்பூர்வமான கலாச்சார வளர்ச்சியின் வரலாற்றைக் கொண்டுள்ளன என்பதை உலக வரலாறு காட்டுகிறது. இனங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் பன்முகத்தன்மை காரணமாக கலை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் வளமான மலேசியா கலாச்சாரமிக்க குடிமக்களையும்  ஒற்றுமையுடன் வாழும் கலைஞர்களையும் கொண்டுள்ளது.  இந்த பன்முகத்தன்மை வாய்ந்த துறையையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க அனைத்து குழந்தைகளும் ஒரு இசைக்கருவியைக் கற்றுக் கொள்ளவும், கலைகளில் ஈடுபடவும், அவர்களின் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்க வேண்டும். நாட்டின் கலை மற்றும் படைப்பாற்றல் நிகழ்ச்சி நிரலைத் […]

நாட்டின் விளையாட்டு துறையை மேம்படுத்துதல்

விளையாட்டுத் துறையானது முதன்மையான முதலீடாகும். இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி கட்டமைப்பை மறுசீரமைத்தல் மூலம் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் நலன் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, பங்குதாரர்களின் ஈடுபாடு, சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் திறமைகளை மெருகூட்டுவதற்குக் கவனமாக திட்டமிடுதல் ஆகியவை விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதுடன் மலேசியாவையும் செழுமைப்படுத்தும். நம்பிக்கைக் கூட்டணி மலேசியாவில் உள்ள அனைத்து வகையான விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தேசிய விளையாட்டுகளை கண்ணியப்படுத்துவதைத் தொடரும். விளையாட்டுப் […]

சிறு குறு மற்றும் நடுத்தர வணிகவியலை பலப்படுத்துதல்

கோவிட் பெருந்தொற்று காரனமாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறை (PMKS) மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் முடிவுக்கு வந்தாலும், PMKS துறை இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. இந்தத் துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைகள் மூலம் PMKS துறையை நாம் மீட்டெடுக்க முடியும். PMKS இன் மீட்சி மற்றும் வளர்ச்சியானது, PMKS எந்த அதிர்ச்சியையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும், பொருளாதாரத் துறையில் தொடர்ந்து பங்களிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளார் வளம் PMKS செயல்பாடுகள் […]

தொழில் துறையை உந்த செய்தல்

ASEAN நாடுகளின் தொழில் துறையில் மலேசியா முக்கிய முதலீட்டு இடமாகவுள்ளது. பலதரப்பட்ட மற்றும் விரிவான பொருளாதார சூழல் அமைப்பு, படித்த பணியாளர்கள் மற்றும் வலுவான நிதித் துறை ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவது நமது நாடு. மலேசியாவைத் தங்களின் முதன்மைத் தேர்வாக மாற்றும் முதலீடுகள் மற்றும் தொழில்களை ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், பிராந்திய பொருளாதார வளர்ச்சியானது, தற்போது முதலீடு மற்றும் தொழில்துறையை ஈர்க்கும் திறன் கொண்டுள்ளது. மலேசியாவின் போட்டியாளர்களாகவும் பிராந்திய அண்டை நாடுகள்  மாறியுள்ளது. எனவே நவீன தொழில்நுட்பம், […]

நிலைவளர் பொருளாதாரம்

மக்களின் வாழ்வாதார நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றத்தின் அபாயம் குறித்தே இம்முறை தேர்தல் நடக்கவிருக்கின்றது. நாம் தயார்நிலையில் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை கடந்து, மாற்றத்தை நம்மால் தவிர்க்க இயலாது என்பதை மறுக்கவியலாது. எப்படி இருந்தாலும், நமது வாழ்வாதாரத்தின் தரத்தை உயர்த்தும் பொறுப்பு நம்மிடத்தில் உள்ளது. அதே வேளை, நமது பொருளாதாரம் குறைந்த கார்பன் கரியமிலவாயு வெளியேற்றத்தில் அதிக வருவாய் ஈட்டும் ஒன்றாக இருத்தலும் அவசியம். வேலைகளும் அனைவருக்கும் சமமான ஒன்றாக இருக்க வேண்டும். தொழிற்புரட்சி அல்லது […]

சுற்றுச்சூழல் பராமரிப்பு

சுற்றுச்சூழல் என்பது இறைவனின் கொடையாகும். அதனைப் பொறுப்புடன் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இயற்கையால் நிகழும் நெருக்கடிகளை முறையாக நிர்வகிக்காவிட்டால், அது நாட்டின் அடுத்த தலைமுறையினரின் நலனைப் பாதிக்கும் என்பது உறுதி. நம்பிக்கை கூட்டணி இவ்வாறான சுற்றுச்சூழல் பராமரிப்பில் அவசரக்கால பருவநிலை மாற்றத்தை உட்படுத்திய பல்வேறு முக்கிய அம்சங்களை வரையறை செய்துள்ளது. முக்கியமாக, வெள்ளப் பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தின் போது அதை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நிலைத்தன்மை மற்றும் முழுமையான கார்பன் கரியமிலவாயு வெளியேற்றமில்லாத நாடாக […]

பேரிடர் கால எதிர்கொள்ளும் நிலைத்தன்மையை உறுதிசெய்தல்

நாட்டில் நிகழ்ந்த மிகவும் மோசமான ஒரு வெள்ளப் பேரிடரைக் கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கண்டுள்ளோம். இயற்கையின் இந்தச் சீற்றத்தினால் 54 உயிர்கள் பலியானதுடன் 2 உயிர்களைக் காணவில்லை. ஏறத்தாழ 71,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளப் பேரிடரால் தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளனர். மேலும், 125,000 மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேதத்தின் மதிப்பு சுமார் ரி.ம 6.5 பில்லியனை நெருங்கும். இந்தச் சம்பவம் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் […]

கல்வி சீர்திருத்தம்

கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் நாட்டின் கல்வி முறைமையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், முறையாக வகுப்புகளை நடத்த இயலாமல் கல்வியும் சமமான முறையில் வழங்கப்படவில்லை. பிந்தைய பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் கல்விச் சீர்த்திருத்தத்தில், கல்வியில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியைக் குறைத்து, கல்வி தரத்தை உயர்த்தி, ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதன் வழி நாட்டில் இருக்கும் இளையோரின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆரம்பக் கல்வி இலவச காலை சிற்றுண்டி […]

பொது போக்குவரத்து சேவைகளின் இருப்பையும் அதிகரித்தல்

அனைத்து சமூகத்தினராலும் பாகுபாடின்றி இலகுவான முறையில், மலிவான விலையில், எளிய பராமரிப்புக்கு உட்பட்ட சிறந்த சேவையை வழங்கும் பொது போக்குவரத்து துறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கனவாகும். ஆனால் மலேசிய நாட்டின் அடிப்படை போக்குவரத்து வளர்ச்சியின் கட்டமைப்பு, தனிமனித வாகன உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, பொது போக்குவரத்துத் துறையை பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பிற நகர்புறப் பகுதியில் வசிக்கும் மக்கள் சொந்த வாகனங்களை […]