தீபகற்பம், சபா மற்றும் சராவாக்கின் பிரதேச சமத்துவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்.
நம்பிக்கை கூட்டணி 1963-ஆம் ஆண்டின் மலேசிய உடன்படிக்கை மற்றும் அரசாங்கங்களுக்கு இடையேயான செயலவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சபா மற்றும் சரவா பிரேதசங்களுக்கான சிறப்புரிமை மற்றும் சலுகைகளும் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.
இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்ளுதல்
அரசியலமைப்பு சட்டம் 112C மற்றும் உட்பிரிவு 2(1), அமைப்பு IV, பத்தாம் அட்டவணையில் நிதர்சனமாக குறிப்பிடப்பட்டுள்ளது போல் 40% சபாவின் இயற்கை வளங்கள் அதனிடமே திருப்பியளிக்கப்படும். சரவாக்கை பொருத்தமட்டில், பிரிவு 112D, பிரிவு 3- இன் கீழ் இவை 5 ஆண்டுக்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யப்படும்.
IGC அறிக்கையின் அறக்கூவல்களை அமல்ப்படுத்துதல்
அரசாங்கங்களுக்கு இடையேயான செயலவை அறிக்கையில் (IGC) கூறப்பட்டுள்ளது போல நீதிமான்களை (Pesuruhjaya Kehakiman) நியமிக்கும் பொறுப்பை மாநில ஆட்சியாளரிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
MA63 உடன்படிக்கை மற்றும் IGC உட்பட மேலும் 12 ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட அனைத்துமே அதன் உண்மையான நோக்கத்தில் அமல்படுத்தப்படும்
சபா மற்றும் சரவாவிலிருந்து 35% நாடாளுமன்ற உறுப்பியம்
IGCக்கு உட்பட்டு, நாடாளுமன்ற உறுப்பியத்தில் 35 விழுக்காட்டினர் சபா மற்றும் சரவா பிரதேசங்களிலை சார்ந்தவர்களாக இருப்பர்.