முதியோர் நலன் காத்தல்

தற்போது மலேசியாவில் வசிக்கும் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 75.6 ஆண்டுகளும் ஆகும். 60ஆம் ஆண்டில் பணிஓய்வு பெற்ற பிறகு, ஏறத்தாழ 10-15 ஆண்டுகள் வரை எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. முறையான சேமிப்பு இல்லாமல், வயதான காலத்தில் முதியவர்கள் நம் நாட்டில் பண நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.

நம்பிக்கை கூட்டணி இச்சிக்கலை கருத்தில் கொண்டுள்ளது. இச்சிக்கலை நிச்சயமாக நம்மால் களைய முடியும் என்பதோடு மலேசியர்களுக்கு முதிய பருவத்தில் வளமான ஒரு வாழ்க்கையை நம்மால் உருவாக்கிட இயலும்.

முதியோருக்கான சிறப்பு நலத்திட்டம் (Skim Mesra Usia Emas)

வயோதிகர்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். இது ரி.ம1 00 மதிப்புள்ள ‘Jom Shopping’ பற்றுச்சீட்டு, இறப்பிற்றகான இழப்புத் தொகை ரி.ம 1000, ‘Jom Travel’ வழி இலவச பேருந்து போக்குவரத்து சேவை உள்நாட்டுச் சுற்றுலா தலங்களுக்கும் வழங்கப்படுதல் போன்றவற்றை உட்படுத்தியிருக்கும்.

இலவச போக்குவரத்து சேவை

50% போக்குவரத்து சேவைக்கான கழிவைக் காட்டிலும், அனைத்து வயோதிகர்களுக்கும் இலவச போக்குவரத்து சேவை வழங்கப்படும்.

முதியோர்க்கான சட்டம் மற்றும் சீரிய வயதாகும் கொள்கைகள் (Dasar Penuaan Aktif)

முதியோர்க்கான சிறப்பு சட்டம் இயற்றப்படுவதோடு, அவர்களின் வயதும் ஏற அதற்கேற்ப ஆக்ககரமான சீரிய கொள்கைகள் வகுக்கப்படும். (Active Aging Policy)

முதியோர் பராமரிப்பு உக்கத்தொகை

நாட்டில் இருக்கும் முதியோரைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் M40 dan B40 தர குடும்பங்களுக்கு உக்கத்தொகை வழங்கப்படும்.

பராமரிப்பு மையம்

முதியோருக்கு தினசரி நடவடிக்கைகள் மேற்கொள்ள பராமரிப்பு மையங்கள் கட்டாயம் அமைக்கப்படும்.

சிறப்பு ஊக்கத்தொகை

முதியோர்களை வேலைக்கு நியமிக்கும் முதலாளிமார்களுக்கு வரி விலக்கும் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

தானியங்கி குடியுரிமை

தங்களது பிள்ளைகள் யாரவது ஒருவர் மலேசியக் குடியுரிமையை ஒஎற்றிருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குத் தானியங்கி முறையில் குடியுரிமை வழங்கப்படும்.

முதியோர் அமைப்புகள்

முதியோர்களுக்கான அமைப்புகளை நிறுவுவதன் வழி, அவர்களது உரிமைகளும் தேவைகளும் அவ்வப்போது பூர்த்தி செய்யப்படும்.

சமூக நல மேம்பாட்டு அமைப்பு (PERKESO) திட்டம் மறுபரிசீலனைச் செய்யப்படும்

சமூக நல மேம்பாடு அமைப்பு மறுபரிசீலனைச் செய்வதன் வழி, பணி ஓய்வுக்குப் பிறகும் முதியோருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளும் தேவைகளை கிடைக்கும்படி உறுதி செய்ய முடியும்.

இந்தக் கட்டுரையைப் பகிர: