மலேசியர்களின் வளமான வாழ்க்கை மற்றும் வளப்பத்தையும் உறுதிசெய்தல்

புவியியல் காரணிகள், சமூகப் பொருளாதார வர்க்கம், குடும்பப் பின்னணி மற்றும் இனம் அனைத்தும் ஒரு சமூகம் மற்றும் ஒரு நபரின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன. தற்போதுள்ள அமைப்பில் உள்ள இடைவெளி, இந்தச் சமூகங்களில் சிலவற்றின், குறிப்பாக இந்திய சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் ஒராங் அசால் சமூகங்கத்தினருக்கும் உண்டான அடிப்படை வசதிகள், தரமான கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் வசதியான வீடுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.

வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இடையீடுகளைச் செயல்படுத்தப்பட வேண்டும். தேசத்தின் செழுமையை அனுபவிப்பதில் யாரும் பின் தங்கிவிடக்கூடாது என்பதற்காக வளப்பத்தை அதிகரிப்பதன் மூலம் சமூகங்களுக்கிடையேயான சமூகப் பொருளாதார இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சிகளைத் தொடர முடியும் என்று நம்பிக்கைக் கூட்டணி (HARAPAN) நம்பிக்கை கொண்டுள்ளது.

குடியுரிமை பிரச்சனை

இந்திய சமூகம் (குடியுரிமையில்லாத இந்தியர்கள்) மற்றும் பிற சமூகங்களின் குடியுரிமை பிரச்சினையைத் தீர்ப்பது. இது பிரதமர் துறையின் கீழ் ஒரு சிறப்புக் குழு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தில் உள்ள சிறப்புத் தேர்வுக் குழுவால் மறு ஆய்வு செய்யப்படும். குடியுரிமைச் செயல்முறை முடியும்வரை இந்தக் குழுவின் தேவைகளுக்கு ஏற்ப உடனடி உதவிகளை இந்த சிறப்புக் குழு ஒருங்கிணைக்கும்.

குடும்ப ஆதரவு

ஊட்டச்சத்து குறைபாட்டின் சிக்கலைச் சமாளிக்கவும் வளர்ச்சி குன்றிய அறிகுறிகளைத் தவிர்ப்பதற்காகவும் பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் பண உதவி வழங்கப்படும்.

பாகுபாட்டை ஒழித்தல்.

குறிப்பாகக் கல்வித் துறையில், வேலையிடத்தில் மற்றும் குடியிருப்பு வாடகை அடிப்படையில் அனைத்து வகையான பாகுபாடு தடைகளையும் நிவர்த்தி செய்தல்.

கல்வி மற்றும் பயிற்சியை அணுகவும்

உயர் கல்விக்கூடங்களில் (IPTA)  பயிலும் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல். பயிற்சி கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்.

சமூக பொருளாதார வளர்ச்சி

மித்ரா (MITRA) போன்ற சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவுகளை மறுஆய்வு செய்துதல். மக்களின் சமூக, பொருளாதார மற்றும் நலன் மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு “மக்கள் மலர்ச்சி” நிதியை அறிமுகப்படுத்துதல். திறன் பயிற்சி, சிறு வணிகங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கான மானியங்கள் ஆகியவற்றின் நோக்கத்திற்காகப் பெண்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான குறைந்தபட்ச ஒதுக்கீட்டில் 40% ஆதரவு திட்டங்களை மேம்படுத்துதல்.

சொந்த வீட்டு உரிமம்

சமூகம் எதிர்கொள்ளும் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது. குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், முன்னாள் பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் வீடுகளை இழந்த பழங்குடியினர் கிராமங்கள். ஊராட்சி அரசும் மாநில அரசும், வீட்டு வசதி மேம்பாட்டாளர்கள் ஒரு வீட்டிற்குப் பதிலாக மற்றொரு வீடு என்ற கருத்தின் அடிப்படையில் வீடுகளைக் கட்டியமைப்பதை உறுதி செய்யும்.

பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகள்

வணிகம், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் பங்களிப்பை அதிகரிக்க உதவி வழங்கப்படும். முன்முயற்சிகளில் நுண் கடன் திட்டங்கள் மற்றும் நிதியுதவி ஆதரவு திட்டங்கள், பயிற்சி, நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை ஆலோசனை ஆகியவற்றில் பெண்களுக்கும் ஊனமுற்றோருக்கும் குறைந்தபட்ச ஒதுக்கீட்டில் 40% வழங்கப்படும்.

அரச விசாரணை ஆணையம்

அதிகார துஷ்பிரயோகத்திற்காகவும் மைகா நிறுவனம், மஜு கல்வி மேம்பாட்டு நிறுவனம் (MIED), மலேசிய நேர்மறை சுற்றுச்சூழல் மற்றும் நல அமைப்பு (SEED),  இந்திய சமூகங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி அமைப்பு (SEDIC), நாம் அமைப்பு (NAAM), மித்ரா (MITRA) போன்ற  சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஊழல் செய்வதை விசாரிக்க அரச விசாரணை ஆணையத்தை நிறுவுதல். மேலும் அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்தல்.

இந்தக் கட்டுரையைப் பகிர: