உறைவிடம் இல்லாமல் தவிப்பது மலேசியர்களுக்கு மிக பெரும் இண்ணலாக உள்ளது. எனவே, அதிகமான வீடுகளை உருவாக்குவதன் மூலம் வளமான வாழ்க்கையையும் குடும்ப உறவுகளையும் மேம்படுத்த முடியும்.
தரமான மற்றும் முழுமையான வாங்கும் அல்லது வாடகைக்கு ஏற்ப நியாய விலை வீடுகள் உருவாக்கி தரும் கணவை நம்பிக்கை கூட்டணி கொண்டுள்ளது. மலேசியாவை வளமிக்க நாடாக உறுமாற்றும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இதில் முக்கிய அம்சமாக வீடுகளின் தோற்றம் மற்றும் அமைப்பு முறையானது அனைவருக்கும் பொதுவான உலகளாவிய கட்டுமான விதிகளுக்கு (Universal Design) உட்பட்டு வடிவமைக்கப்படும்.
வாங்கும் அல்லது வாடகைக்கு ஏற்ற விலையில் வீடுகள்
வாங்க மற்றும் வாடகை எடுக்க முடிந்த நியாய விலையில் குறைந்த அல்லது நடுத்தர விலையிலான வீடுகள் தேவைப்படும் இடங்களில் உருவாக்கப்படும். நாங்கள் அதிகமான வாடகைக்கு பின் வாங்கும் (Rent-2-Own) திட்டங்களை அமல்படுத்தி வீடுகளை வாங்க நினைக்கும் மக்களின் இடரை நிவர்த்தி செய்வோம். Rumah Transit எனப்படும் தற்காலிக வீடுகள், மக்கள் நிரந்தர குடியிருப்புகளுக்கு செல்வதற்கு முன்பு ஏதுவாக அனத்து உள்ளூர் நகராட்சிகளிலும் அமைக்கப்படும்.
கடனுதவி உத்தரவாதம்
நம்பிக்கை கூட்டணியானது மீண்டும் ரி.ம 3 பில்லியன் உத்தரவாத தொகையை அறிமுகம் செய்ய எண்ணம் கொண்டுள்ளது. இதன் மூலம், முதல் முறையாக நியாய விலை வீடு வாங்குபவர்களுக்கு இத்திட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
வீடுகளை வாங்கும் வாய்ப்பு
PPR மலிவு விலை வீடுகளை வாடகைக்கு வசிப்பவர்கள் அவ்வீடுகளை தாங்களே வாங்கிகொள்ள ஏதுவாக வழிவகை செய்யப்படும்.
சிறப்பு உறைவிட தீர்ப்பாயம் (Tribunal Khas Perumahan)
வீடு வாங்குவோரின் உரிமைகளை காத்திட இச்சிறப்பு தீர்ப்பாயம் செயல்படும் என்பதோடு இந்த திட்டமானது வீடுகளை வாடகைக்கு எடுக்கும் மக்களின் உரிமைகளையும் காக்கும் வகையில் செயல்படும்.
வீடுகளை சீரமைக்கும் பனியை ஏற்றல்
பல்வேறு குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகள் செம்மையாக சீரமைக்கப்படமால் மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்வாறான வசிப்பிட வளப்பத்தை நிலைச்செய்ய, நாங்கள் இக்குடியிருப்புளின் சீரமைக்கும் பனியை ஏற்கவுள்ளோம். இதன் மூலம், சிறந்த வாழும் சூழலையும் பாதுகாப்பையும் நம்மால் உறுதி செய்திட இயலும்.
100% முத்திரை வரி தள்ளுப்படி வழங்கப்படும்
நம்பிக்கை கூட்டணி முதல் முறை வீடுகள் வாங்குவோருக்கு 100% முத்திரை வரி தள்ளுப்படி வழங்கும் திட்டத்தை ரி.ம 500,000-க்கும் குறைவான நகரா சொத்துகளான வீடுகளுக்கும் விரிவுப்படுத்தவுள்ளது.