கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பங்களுக்காகவும் அதிகமாக உழைக்கின்றனர்; தியாகம் செய்கின்றனர். இருப்பினும், இன்றளவும் கூட பெண்களுக்குப் பாலியல் சமத்துவம் வழங்கப்படுவதில்லை. அவர்களது உரிமைகளும் பரிக்கப்படுகின்றன.
இச்சிக்கலைக் களைவதற்கு, பெண்களுக்குத் தேவையானவற்றை கொண்டு கொள்கைகள் நிறுவப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் நல்வாழ்வும் அதிகப்படியான பங்கை வகிக்கின்றது.
பாலினச் சமத்துவ உள்ளடக்கம் (Inclusivity)
பாலினச் சமத்துவமின்மையைச் களைவதற்கு, நாடாளுமன்றத்தில் படைக்கப்படும் சட்ட மசோதாகள் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு அவற்றை உள்ளட்டக்கிய ஒன்றாகவும் இருத்தலை உறுதி செய்ய வேண்டும்.
தரவுகள் சேகரிக்கும் அமைப்பு
நாடளவில் ஒரு அமைப்பை உருவாக்கி, பெண்களையும் குழந்தைகளையும் உள்ளடக்கிய தரவு ஒருங்கிணைப்பை செய்ய வேண்டும்.
குழந்தை பராமரிப்பு மானியத்தொகை
தற்காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பொதுவானச் சிக்கல் குழந்தை பராமரிப்பு தான். இச்சிக்கல் அவர்களது சுமையை அதிகரித்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, B40, M40 தர வேலை செய்யும் குடும்பப் பெண்களுக்குக் குழந்தை பராமரிப்பு மானியத்தொகை வழங்கப்படும்.
குடியுரிமை உத்திரவாதம்
தந்தையின் வழி கிடைக்கப்பெறும் குடியுரிமையைப் போலவே, வெளிநாட்டில் பிரசவிக்கும் மலேசிய தாய்மார்களுக்கும் தாய்வழி குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இதனை செயல்முறை படுத்த அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14(1)(b) திருத்தப்படும். இதன் வழி, பெண்கள் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தங்களையும் குடும்பங்களயும் முறையாக நிர்வகிக்க இயலும்.
மாதவிடாய் வறுமையைக் களைதல்
நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவிகளுக்கும், B40 தர பெண்களுக்கும் அணையாடைகள் (Sanitary Pads) இலவசமாக வழங்கப்படும்.
ஷரியா நீதித்துறையை வளப்படுத்துதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்ய ஷரியா நீதித்துறைக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு அதன் நிர்வாக முறையும் செம்மைப்படுத்தப்பட்டு சீர்திருத்தம் காணும்.
2025-க்குள் சிறார் திருமணம் காரணங்களைக் கையாளுதல்
2025-க்குள் சிறார் திருமணத்திற்காக காரணங்களை கையாளும் தேசிய 2020- ஆம் ஆண்டுக்கான திட்ட வரைவு தொடர்ந்து அமலில் இருப்பது உறுதி செய்யப்படும். இதன் வழி, பெண்கள், குழந்தைகளுக்கான உரிமைகள் பராமரிக்கப்படும்.