பழங்குடியின மலேசியர்களின் நலனில் பலர் இன்னும் அக்கறை கொள்ளவில்லை என்பதோடு மட்டுமில்லால் அவர்தம் எதிர்நோக்கும் சிக்கல்கள் யாவும் இன்னும் அரசால் களைய இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
நம்பிக்கை கூட்டணி பழங்குடியின மலேசியர்களின் நலன் காக்கும் கடப்பாட்டினை, 13 செப்டம்பர் 2007 அன்று ஐக்கிய நாட்டு சபையால் ஏற்கப்பட்ட பழங்குடி சமூக உரிமைகளுக்கான பிரகடணத்தில் (UNDRIP) கூறப்பட்டுள்ள அறைகூவல்களை அடிப்படையாக கொண்டு பழங்குடியின சமுதாயத்தின் உரிமைகளையும் நலன்களையும் காத்திடும் என்பது நிதர்சனம்.
பழங்குடியினர் நிலங்களை பாதுகாத்தல்
பழங்குடியின மக்களின் கண்ணியத்தை காப்பதோடு, அவர்தம் அடிப்படை பாரம்பரிய நிலங்களுக்கான உரிமைகளை (Native customary rights to land) காக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படும். இதற்காக ஏற்கனவே அமலில் உள்ள நிலம் சார்ந்த சட்டங்களிலும் கொள்கைகளிலும் மாற்றம் செய்யப்படும்.
நில தீர்ப்பாயம்
பாரம்பரிய நிலம் சார்ந்த சட்ட முரண்பாடுகள்/வழக்குகள் யாவையும் தீர்த்து வைக்க பழங்குடியின நில தீர்ப்பாயம் (Tribunal) ஒன்று அமைக்கப்படும்.
நில பட்டா வழங்குதல்
பழங்குடியின மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய சட்டப்பூர்வ நிலங்களுக்கு பட்டா வழங்கும் செயல்முறை துரிதப்படுத்தப்படும். Program Khas Perkhidmatan Negeri Sabah (PANTAS) திட்டம் மூலம் பட்டா வழங்குதலில் உள்ள சிக்கல்களை களையும் வரை ஒவ்வொரு ஆண்டும் ரி.ம 100 ஆயிரம் ஒதுக்கப்படும்.
சபா மாநில மக்களின் நீதிமன்றம்
சபா மாநில மக்களின் நீதிமன்ற சுய நிர்வாக உரிமைகளை மீண்டும் வழங்குவதோடு அவற்றை வலுவுற செய்ய மாநில மக்கள் நீதிமன்ற துறை ஒன்று அமைக்கப்படும். மேலும், அத்துறையில் பணிப்புரிபவர்களுக்கு சான்றிதழும் தக்க அங்கீகாரமும் மக்கள் நீதிமன்ற பயிற்சி கல்லூரியான Institut Latihan Mahkamah Anak Negeri (ILMAN) மூலம் வழங்கப்படும்.
பழங்குடியின மேம்பாட்டிற்கு முன்கூட்டிய அறிவிப்பு மற்றும் முன் அனுமதி
பழங்குடியின மக்களின் இடங்களில் அரசு மேற்கொள்ளும் எந்தவொரு மேம்பாட்டு திட்டத்திற்கும் முன்கூட்டிய அறிவிப்பு மற்றும் வற்புறுத்தல் இல்லாத முன் அனுமதியை பெறும் பழக்கம் (Free, Prior and Informed Consent) கடைப்பிடிக்கப்படும்.