நிலைவளர் பொருளாதாரம்

மக்களின் வாழ்வாதார நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றத்தின் அபாயம் குறித்தே இம்முறை தேர்தல் நடக்கவிருக்கின்றது. நாம் தயார்நிலையில் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை கடந்து, மாற்றத்தை நம்மால் தவிர்க்க இயலாது என்பதை மறுக்கவியலாது. எப்படி இருந்தாலும், நமது வாழ்வாதாரத்தின் தரத்தை உயர்த்தும் பொறுப்பு நம்மிடத்தில் உள்ளது. அதே வேளை, நமது பொருளாதாரம் குறைந்த கார்பன் கரியமிலவாயு வெளியேற்றத்தில் அதிக வருவாய் ஈட்டும் ஒன்றாக இருத்தலும் அவசியம். வேலைகளும் அனைவருக்கும் சமமான ஒன்றாக இருக்க வேண்டும்.

தொழிற்புரட்சி அல்லது நிலைவளர் பொருளாதாரம் என்பது நமது வாழ்வாதாரத்தை உயர்த்துவது மட்டுமின்றி சமமான பொருளாதார நிலையை வழங்குகின்றது. மேலும், இது சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, கார்ப்பரேட் நிறுவங்களின் அதீத செல்வாக்கை கட்டுப்படுத்துவதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒறுமைபாட்டிற்கும் வழிவகுக்கின்றது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீட்டைச் செலுத்துவதன் வழி, 50% (TPES) இலக்கை அடை முடியும். மேலும், இனி அதிகப்படியான கட்டடங்கள், தனிநபர் வீடுகள் உட்பட அனைத்து இடங்களிலும் சூரிய சக்தியை பயன்படுத்தும் கருவிகள் கொண்டுவரப்படும்.

தடக் கரிமத்தைக் (Carbon Footprint) குறைத்தல்

பசுமை திட்டத்திற்கு வழிவகுத்து, 10,500 வளாகங்களில் 20%-ற்கு எரிசக்தி நிறுவல் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இது நாட்டில் இருக்கும் கரிமப் பொருளாதாரத்தைக் குறைத்து அனைவருக்கும் பசுமைத் திட்டத்தில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி வகுக்கும். 

இந்தக் கட்டுரையைப் பகிர: