ஒரு முழுமையான சமநிலை செயல்முறை இல்லாமல், தேசிய நிர்வாகம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு ஆளாக நேரிடும். இது அரசாங்கத்தின் சொத்து கொள்ளைப்போவதற்கு வழிவகுப்பதோடு சுயநல அரசியல்வாதிகள் பதவிகளுக்காகச் சண்டயிடுவது, அதிகாரத்தை மையப்படுத்துவது மற்றும் அதிகப்படியான செல்வத்தைக் கொள்ளையடிப்பது ஆகியவை நடக்கும். இது நாட்டிற்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தும்.
நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து நிர்வாக அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் மலேசியா நிர்வாக அமைப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதோடு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது சட்ட நிறுவனங்கள், மற்றும் நாட்டின் அரசியல் ஒழுங்கை மறுசீரமைக்கும்.
10 ஆண்டுகள் சேவை வரம்பு
இந்தப் பதவிகளுக்கு அதிகாரம் அதிகமாக மையப்படுத்தப்படுவதைத் தவிர்த்தல். தேசிய நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளித்து பிரதமர், மந்திரி மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு வரம்பு விதித்தல்.
அரசு வழக்கறிஞரின் அதிகாரங்களைப் பிரித்தல் – தலைமை வழக்குரைஞர்
அரசு வழக்கறிஞரின் சுதந்திரத்தை வலுப்படுத்த தலைமை வழக்குரைஞலிருந்து அரசு வழக்கறிஞர் வரை அவர்களின் நிலை மற்றும் பங்கைப் பிரித்தல். தலைமை வழக்குரைஞர் அரசாங்கத்தின் சட்ட ஆலோசகராக மட்டுமே செயல்படுதல். அதே நேரத்தில் ஒரு தனி அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர்பான விஷயங்களில் முடிவுகளை எடுத்தல்.
நியமனம் செய்யப்பட்ட வேட்பாளரை மறுஆய்வு செய்தல்
அரசு வழக்குரைஞர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை காவல்துறை அதிகாரி ஆகியோரின் முக்கியப் பதவிகளுக்கான நியமனங்கள் நாடாளுமன்றத்தின் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புத் தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட நபர்களின் பதவிகளுக்கான உத்தரவாதங்கள் வழங்கப்படும். இதனால் அவர்களின் சேவைக் காலம் பிரதமரால் தன்னிச்சையாக நிறுத்தப்படாது.
நாடாளுமன்றத்தின் நிலையான கால சட்டம்
நாடாளுமன்ற நிலையான காலச் சட்டம், அதன் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவை (DUN) திடீரென கலைக்கப்படுவது தொடர்பான நீண்டகால ஊகங்களில் இருந்து எழும் நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளரின் நம்பிக்கை மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இந்த அரசியலின் நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதற்காக நாடாளுமன்றம் மற்றும் DUN காலவரை முடியும் போது மட்டுமே கலைக்கப்படுவதை உறுதி செய்வதல். நம்பிக்கைக் கூட்டணி, நாடாளுமன்றத்தின் நிலையான காலத்திற்கான சட்டத்தை உருவாக்கும்.