தொழில் துறையை உந்த செய்தல்

ASEAN நாடுகளின் தொழில் துறையில் மலேசியா முக்கிய முதலீட்டு இடமாகவுள்ளது. பலதரப்பட்ட மற்றும் விரிவான பொருளாதார சூழல் அமைப்பு, படித்த பணியாளர்கள் மற்றும் வலுவான நிதித் துறை ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவது நமது நாடு. மலேசியாவைத் தங்களின் முதன்மைத் தேர்வாக மாற்றும் முதலீடுகள் மற்றும் தொழில்களை ஈர்க்கும் திறனைக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், பிராந்திய பொருளாதார வளர்ச்சியானது, தற்போது முதலீடு மற்றும் தொழில்துறையை ஈர்க்கும் திறன் கொண்டுள்ளது. மலேசியாவின் போட்டியாளர்களாகவும் பிராந்திய அண்டை நாடுகள்  மாறியுள்ளது. எனவே நவீன தொழில்நுட்பம், தன்னியக்கம் IR4.0, எண்மியமயமாக்கல் (Digitalisation) மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களைப் பயன்படுத்தும் எதிர்கால பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு நாம் தயாராக வேண்டும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான செயல்முறையை எளிதாக்குவதில் மலேசியாவும் மிகவும் திறமையானதாக இருக்க வேண்டும்.

நம்பிக்கைக் கூட்டணி, தொழில்துறையில் மலேசியாவின் போட்டித்திறன் சிறந்ததாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. ASEAN பிராந்தியத்தில் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மலேசியாவை நாம் நிலைத்திருக்க செய்ய முடியும்.

தொழில்துறை வசதி

MIDA, MATRADE, SME Corp, MPC, MIDF மற்றும் பல போன்ற அரசு நிறுவனங்களின் தொடர்ச்சியான வசதிகளின் வழி அதிகாரத்துவத்தைக் குறைப்பதன் மூலம் வணிக மற்றும் வர்த்தக செயல்முறைகளை எளிதாக்குதல்.

நிதி

உள்நாட்டு நேரடி முதலீட்டில் ஈடுபடும் மலேசியாவிற்குச் சொந்தமான நிறுவனங்களின் திறனை வலுப்படுத்தும் கூடுதல் நிதிகளை அறிமுகப்படுத்துதல். உள்நாட்டு முதலீட்டு நிதியம் (DISF) போன்ற அதே நோக்கில், இந்த நிதியானது உள்நாட்டு நிறுவனங்களின் இயந்திர உபகரணங்களை மேம்படுத்தவும் தன்னியக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், பயிற்சிகள் மூலம் தொழிலாளர் திறன்களை மேம்படுத்தவும் மற்றும் அவர்களின் தயாரிப்புகளின் சர்வதேச சான்றிதழை அடையவும் அனுமதிக்க வேண்டும்.

ஏற்றுமதி ஊக்கத்தொகை

சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்க அதிக ஏற்றுமதி ஊக்குவிப்பு தொகை வழங்குதல். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக வணிகப் பயணங்கள் தொடர்பான செலவினங்களில் மூன்று மடங்கு விலக்குகளுக்கான வரிச் சலுகைகள் வழங்குதல். வெளிநாடுகளில் தங்கள் விற்பனையை அதிகரிக்க உள்ளூர் நிறுவனங்களின் இயங்கலை விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தலுக்கு மானியங்கள் மற்றும் ஊக்கங்களை வழங்குதல்.

சுதந்திர வர்த்தக மண்டலம்

கோத்தா கினாபாலு பணியிடத்தில் (KKIP), லஹாட் டத்து மற்றும் சண்டாகான் POIC களில் உள்ள இலவச வர்த்தக மண்டலங்கள் மற்றும் சபா பிராந்தியத்தில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சிபிதாங் எண்ணெய் மற்றும் எரிவாயு பணியிடம் (SOGIP).

கட்டமைப்பை மேம்படுத்தல்

தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் இடங்களின்அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல். தொழில் இடங்கள் முதலீடு மற்றும் தொழில்துறையை ஈர்ப்பதில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்தல்.

இந்தக் கட்டுரையைப் பகிர: