கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் வேலை செய்வோரின் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் வேறு வேலைக்கு மாற்றலாகி செல்லும் அதே வேளை பலர் தங்கள் வேலைகளை இழந்து தவித்தனர். வேலையின்மை குறீயீடு 3.3% (2019) இல் இருந்து 4.6% விழுக்காடாக 2021 ஆம் ஆண்டு உயர்ந்துள்ளது. வேலையின்மை காரணமாக நாட்டின் பொருளாதாரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை கூட்டணி அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதே வேளை குறைந்தப்பட்ச சம்பள உத்தரவாதம், தொழிலாளர் நலத்திட்டங்கள் மற்றும் வேலையிடங்களில் பாகுப்பாட்டை களைதல் ஆகியவற்றிற்கும் முண்ணுரிமை வழங்கப்படும்.
குறைந்தப்பட்ச சம்பள திட்டம்
குறைந்தப்பட்ச சம்பள திட்டம் மிக நேர்த்தியாக வரையப்படும். மலேசியாவை ஒரு அதிக வருவாய் ஈட்டும் நாடாக மாற்ற இது உறுதுணையாக இருக்கும்.
பாகுப்பாடுகளை களைதல்
வேலையிடத்தில் அனைத்து விதமான பாலின, இன, மத, உடல் வாகு உட்படுத்திய பாகுபடுகளை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பொது நலன்களை காத்தல்
புதிய தொழிலாளர் நல திட்டங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக, Gig Workers எனப்படும் சுய சேவை வேலை செய்வோருக்கு இவர்களை நிர்வக்கிக்கும் சிறப்பு துறை, இலவச வாழ்நாள் காப்பீடு, வேலை ஒப்பந்தம் மற்றும் இறப்பின் பிறகு வழங்கும் ரி.ம 10,000 இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றையும் உட்படுத்திய 6 இலட்சம் சுய சேவை தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையும்.
வேலையின்மையின் போது சிறப்பு கொடுப்பண திட்டம் (Elaun Khas)
வேலை இழந்தோர்க்கு புதிய வேலை கிடைக்கும் வரை சிறப்பு கொடுப்பண திட்டம் தொடங்கப்படும்.
பணி ஓய்வின் போது ஏற்படும் ஏழ்மை நிலையை கையாளுதல்
பணி ஓய்வின் பிறகு ஏற்படும் வறுமை நிலையை ஒழிக்க முன்னதாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முக்கியமாக, அவர்களின் சேமிப்பை அதிகரிக்கும் திட்டம் வரையப்படும். அதோடு, சுயமாகவே KWSP கணக்குகளை அனைவருக்கும் வயது வரம்பின்றி திறக்கும்படி வழிவகை செய்யப்படும் என்பதோடு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சேமிப்பு தொடங்க KWSP பணத்தை முன்னதாகவே வெளியாக்க வழிவகை செய்யப்படும்.