தீபகற்ப மலேசியாவை ஒப்பிடுகையில் சபா மற்றும் சரவா பிரேதசங்களின் வளர்ச்சி இன்னும் பிந்தங்கிய நிலையிலையே உள்ளது.
நம்பிக்கை கூட்டணி இவ்விரு பிரேதசங்களுக்கு இடையேயான வளர்சி இடைவெளியை குறைக்கும் கடப்பாட்டை கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக சுகாதாரம் மற்றும் திறமைகளை ஊக்குவித்தல் கட்டாயம் இருக்கும்.
தேசிய நிர்வாக ஒருங்கிணைப்பு மன்றம் (Majlis Penyelarasan Pentadbiran Negara)
தேசிய நிர்வாக ஒருங்கிணைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம் அதில் சபா மற்றும் சரவா பிரதேசங்களை உட்படுத்திய சுயாட்சி நிர்வாக அமைப்பு (agency) ஒன்று நிறுவ இயலும்.
சபா மற்றும் சரவாக் மாநிலத்திலிருந்து துணைப் பிரதமர்
இந்த அமைப்பின் செம்மையான நிர்வாகத்தை கருத்தில் கொண்டு இரண்டு (2) துணைப் பிரதமர்கள் நியமிக்கப்படுவதோடு அதில் ஒருவர் சபா மற்றும் சரவாக் பிரேதசத்தை சார்ந்தவராக இருப்பார்.
நிபுனத்துவம் வாய்ந்த மருத்துவ சேவை
நிபுணத்துவம் வாயந்த மருத்துவ பிரிவுகளான இருதயம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் சிகிச்சைகளுக்காக சபாவிலுள்ள சண்டாக்கான், தாவாவ் மற்றும் மத்திய, வடக்கு சரவாக் போன்ற பகுதிகளின் மருத்துவமனைகளுக்கு விரிவிப்படுத்தப்படும்.
உயர்கல்வி & திறன் கல்வி (TVET)
சபா மற்றும் சரவாவில் புதிய இரண்டு பொது பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவதோடு, திறன் கல்வியான TVET மேலும் ஊக்குவிக்கப்படும். அதிகமான சபா, சரவாக் மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களை இப்பிரதேசங்களில் கல்வியின் மூலம் வளம்பெற மற்றுமொரு முயற்சி இதுவாகும். இதன் மூலம் அதிகமான திறமைகளை உருவாக்குவதோடு, வேலை வாய்ப்பையும் அதிகரிக்க இயலும்.