சுற்றுச்சூழல் என்பது இறைவனின் கொடையாகும். அதனைப் பொறுப்புடன் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இயற்கையால் நிகழும் நெருக்கடிகளை முறையாக நிர்வகிக்காவிட்டால், அது நாட்டின் அடுத்த தலைமுறையினரின் நலனைப் பாதிக்கும் என்பது உறுதி.
நம்பிக்கை கூட்டணி இவ்வாறான சுற்றுச்சூழல் பராமரிப்பில் அவசரக்கால பருவநிலை மாற்றத்தை உட்படுத்திய பல்வேறு முக்கிய அம்சங்களை வரையறை செய்துள்ளது. முக்கியமாக, வெள்ளப் பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தின் போது அதை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நிலைத்தன்மை மற்றும் முழுமையான கார்பன் கரியமிலவாயு வெளியேற்றமில்லாத நாடாக மலேசியாவை உறுமாற்றுதலும் அடங்கும் (Net Zero Emissions). இவற்றை முயலும் அதே வேளை, மக்களின் சுபிட்சமான வாழ்வு மற்றும் பொருளாதாரத்திற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
தட்பவெட்பநிலை மாற்றச் சட்டம்
தட்பவெட்ப நிலை மாற்றச் சட்டம் 2040 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வெளிப்படும் கரிமிலங்களைக் கட்டுப்படுத்தவும் காடுகளைப் பாதுகாக்கவும் நிறுவப்படும். இம்முயற்சி நம்பிக்கை கூட்டணியால் தொடங்கப்பட்ட போதிலும் தேசிய முன்னனியும், தேசிய கூட்டணியும் (Perikatan Nasional) நாட்டில் ஆட்சியை கவிழ்த்ததன் விளைவாக இதனை அமலுக்கு கொண்டு வர இயலவில்லை.
சுற்றுச்சூழல் நிதி மாற்றம்
சுற்றுச்சூழல் நிதி பரிமாற்றத்தின் (EFT) பொறிமுறையை மேம்படுத்தி மாநில அரசுக்கு குறைந்தபட்சம் ரி.ம 1 பில்லியன் வன நிதி ஒதுக்கீட்டை வழங்கி ஊக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட வர்த்தமானியில் (Gazette) உள்ள காடுகளின் பாதுகாப்பை இரத்து செய்யாமல் (De-gazetting) அவற்றை பாதுகாக்க இயலும்.
கடல்சார் பாதுகாப்பு பகுதிகள்
2030ஆம் ஆண்டுக்குள் கடல்சார் பாதுகாப்புகளை 30% உயர்த்த வேண்டும் என்பதோடு அவற்றை எவரும் சட்டவிரோதமாக சுரண்டுதலை (Exploitation) தவிர்க்க இயலும்.
எல்லை கடந்த காற்று தூய்மைகேடு சட்டம் (Akta Jerebu Rentas Sempadan)
எல்லை கடந்த காற்று தூய்மைகேடு சட்டத்தை நிறுவுவதன் வழி, அண்டை நாடுகளுடன் இணைந்து காற்று நம்மால் தூய்மைகேட்டை குறைக்க இயலும்.