அனைத்து முக்கிய முடிவுகளும் மையத்திலேயே எடுக்கப்படும் (Centralised Decision Making). இதன் விளைவாக, சபா மற்றும் சராவாக் பிரேதசங்களை உட்படுத்திய முடிவுகள், கொள்கைகள் யாவும் இப்பிரதேச மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அமைவதில்லை.
இவ்வாறான ஒற்றை முடிவெடுக்கும் நிலையை மாற்றியமைத்து, மையத்தை பிரதானமாக கொண்டு விளங்கும் ஆளுமையையும் படிபடியாக அடிமட்ட நிலைகளிலிருந்தும் அரசு சேவைகளிலும் அகற்ற முற்பட வேண்டும். இதன் மூலமே நம்மால் பரவலாக்கத்தை நிறுவ முடியும் (Decentralisation).
கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் சுய நிர்வாக உரிமை (Autonomy)
அரசியலமைப்பு சட்டம், 9ஆம் அட்டவணையை (ஒன்றினைந்த பட்டியல்- Senarai Bersama) திருத்துவதன் மூலம் பிரதேச அரசாங்கமே தத்தம் கல்வி மற்றும் சுகாதார துறைகளை தன்னிச்சையாக சுய நிர்வாக முறையில் மேம்படுத்த முடியும். இதன் மூலம்:
i. வரிய நிலை பள்ளிகளை தரவுயர்வு செய்ய இயலும்
ii. வருடாந்திரமாக கடாசன் டுசுன், மூரூட், இபான், மற்றும் பிற சமூக தாய்மொழி கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலை தவறாது தரத்துடன் வழங்கப்படுவதை உறுதி செய்ய இயலும்.
iii. சபா தேசிய பல்கலைக்கழகத்தில் சட்ட கல்லூரி அமைக்க இயலும்
iv. சுகாதார அறிவியல் மற்றும் சோதனைக் கூடங்களை சீர் செய்து செம்மையுற செய்ய இயலும்
மின்சாரத்தை நிர்வகிக்கும் உரிமை
Sabah Electricity Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாகத்தை இரு தரப்பு ஒப்புகொண்டதன் படி திருப்பியளித்தல்.
கிராம சபை நிர்வாக மன்றம் (Majlis Pengurusan Komuniti Kampung)
கிராம சபை நிர்வாக மன்றங்களை மக்களின் பங்களிப்பையும் மக்களாட்சியையும் பலப்படுத்தி கூட்டரசு அரசாங்கமே நேரடியாக ஒதுக்கப்பட்ட தொகையை வழங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் அரசு துறைகளில் பணிப்புரிவோரில் இருந்து நியமிக்கப்படுவர்.
மாநில மக்களின் அரசு வேலை
Borneosasi கொள்கை, அதாவது 70% இப்பிரதேச அரசு வேலைகளில் சபா சரவா மக்களே நியமிக்கப்படுவர் குறிப்பாக மேல்நிலை பதிவகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.