கோவிட்-19 தொற்று முடிவுக்கு வந்த பிறகு நாட்டின் வேலையின்மை விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சபாவில் குறிப்பாக கடந்த ஆண்டு 9% வரை வேலையின்மை விகிதத்தை பதிவு செய்தது. வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகவும், முதலீட்டாளர்களின் வருகையை ஈர்ப்பதற்கும், அதன்பிறகு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உள்கட்டமைப்பு மற்றும் தளவாட வசதிகளை (Logistics) மேம்படுத்துவது தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக நம்பிக்கை கூட்டணியானது, சபா மற்றும் சரவாக்கின் வேலையற்ற மக்கள் தத்தம் வேலைகளைப் பெற்று தங்கள் குடும்பத்தை ஆதரிக்க இயலும் வகையில் பின்வரும் முயற்சிகளை செயல்படுத்தும். இதன் மூலம் சபா மற்றும் சரவாக் மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.
துறைமுகங்களை மேம்படுத்துதல்
லஹாட் டத்து POIC மற்றும் செப்பாங்கார் (Sepanggar) துறைமுகங்களை தரமுயர்த்தி மேம்படுத்துவதோடு கூடாட் (Kudat) துறைமுகம் ஒன்றை நிறுவுதல்
சுதந்திர வர்த்தக மண்டலம்
கோத்தா கினாபாலு தொழில்துறை பணியிடம் (KKIP), லஹாட் டத்து POIC களில் மற்றும் சிபிதாங் எண்ணெய் மற்றும் எரிவாயு பணியிடம் (SOGIP) ஆகியவற்றை சுதந்திர வர்த்தக மண்டலம்.
அடிப்படை வசதிகள்
சபாவில் உள்ள அனைத்து தொழில் பூங்காக்களிலும் தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகளை களைவதற்கு ஏதுவாக மானிய ஒதுக்கீடு செய்வதன் மூலம் மத்திய அரசு முக்கிய பங்கு வகிக்கிறது.
முழுமையான விமான நிலைய வசதிகள்
பிரதான விமான நிலையங்களில் குளிர்பதன சேமிப்பு வசதிகள், பழுதுபார்ப்பு வசதிகள், விமான பராமரிப்பு மற்றும் மாற்றியமைத்தல் (MRO) வசதிகள் மற்றும் ஒரு வானியல் தொழில் பூங்கா ஆகியவை முறையாக நிறுவப்பட்டு முழுமைப்படுத்தப்படும்.