நாட்டின் எல்லைகள் மிகவும் சுலபமாக ஊடுருவும் வகையில் அமைந்திருப்பதால், சபாவில் அதிகமான அந்நிய குடியேறிகளின் சட்டவிரோத வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு குடியேறும் அந்நிய குடியேறிகளின் விளைவாக சபாவில் அதிகமான குமுகாய சீரழிவிற்கு இட்டு செல்லும் குற்றச்செயல்கள் நிறைய நடப்பது நிதர்சனமாகும். ஆக, இவற்றை களைய ஒரு ஆக்ககரமான மற்றும் முழுமையான திட்ட வரைவு ஒன்றை நாம் வடிவமைப்பது அவசியமாகிறது.
நம்பிக்கை கூட்டணியானது மேற்கூறிய அந்நிய குடியேறிகளின் சட்டவிரோத வருகையால் ஏற்படும் நான்கு (4) முக்கிய அச்சுறுத்தல்களை கண்டறிந்துள்ளது:
i. சந்தேகத்திற்குரிய அடையாள அட்டை (MyKad) வைத்திருப்பவர்கள்
ii. பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டு அகதிகள்
iii. நாடற்றவர்கள் (Stateless)
iv. சட்டவிரோத வருகையினர் (Pendatang Tanpa Izin- PATI) நம்பிக்கை கூட்டணி இவ்வாறான சிக்கல்களை களைவதற்கு அரசு பாதுக்காப்பு அமைப்புகளை உட்படுத்திய சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைக்க திட்டம் கொண்டுள்ளது. இதன் மூலம் இச்சிக்கல்களை விரைவில் களைய இயலும் என்பது திண்ணம்.