நாட்டின் மிகப்பெரிய சாபமாகக் கருதப்படுவது கையூட்டு ஆகும். இது நாட்டின் சட்டத்துறை மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டுவதோடு, நாட்டின் மக்களாட்சியையும் நிலைகுழைய செய்யவல்லது. மக்களின் முயற்சியால் கடந்த 14-ஆம் பொதுத் தேர்தலின் போது ஊழல் ஆட்சி தூக்கியெறியப்பட்டது.
இருந்தபோதிலும், தொடர்ந்து நடந்து வந்த அரசியல் குழப்பங்களினால், ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் பிடியில் நாடு மீண்டும் சிக்கியது. நாட்டு மக்களாகிய நாம், ஊழலை ஒழிக்க தொடர்ந்து போராட வேண்டும். நம்பிக்கை கூட்டணி, சுத்தமான மற்றும் கண்ணியமிக்க, ஊழலற்ற ஒரு நாட்டை மக்களுக்கு உருவாக்கித் தரும் கடப்பாட்டினை கொண்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணையத் தலைவர்
இலஞ்ச ஊழல் ஆணையத் தலைவர் வேட்பாளரின் பின்னனியை அடையாளம் காண வேண்டும். இதற்கு நாடாளுமன்ற இரு-கட்சி சிறப்பு பனிக்குழுவை நம்மால் பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் வழியே, நேர்மையான அதிகாரத்துவத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.
சொத்துமதிப்பு அறிவிப்பு
சொத்துமதிப்பை அறிவிக்க வேண்டும் என்பது கடந்த பொது தேர்தலுக்குப் பிறகு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால் நம்பிக்கை கூட்டணி அனைத்து அமைச்சர்கள் தொடங்கி 18 வயதுக்கு மேற்பட்ட சாதாரன குடிமக்கள் வரை உள்ள சொத்துமதிப்பை அறிவிக்க ஊக்குவிக்கின்றது.
தகவல் சுதந்திரச் சட்டம்
நம்பிக்கை கூட்டணி இந்தத் தகவல் சுதந்திரச் சட்டத்தை நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைப் பாதிக்காத வண்ணம் அமலுக்குக் கொண்டு வர எண்ணம் கொண்டுள்ளது. இத்திட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உள்ளது தவிர எந்த ஒரு அமைச்சர்களுக்கும் இல்லை.
பொது கொள்முதல்
நிதி அமைச்சர் 6 மாதங்களுக்கு ஒரு முறை பொருட்களின் விலையை புதுப்பிக்க வேண்டும். திட்டங்களுக்கு, RFP மற்றும் திறந்த கொள்முதல் முறை செயல்படுத்தப்படும். நேரடி பேச்சுவார்த்தைகள் தேசிய பாதுகாப்பு விஷயங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அவை எதிர்கட்சியின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பதவிகளுக்கு உட்பட்டது.
தகவல் தெரிவிப்பவர் பாதுக்காப்பு சட்டத்தை திருத்துதல்
இந்தச் சட்டத்தை மற்றியமைப்பதன் வழி, தகவல் தெரிவிப்பவர் பொறுப்பில்லாமல் நேரிடையாக ஊடகங்களை நாடுவதைத் தவிர்க்கலாம். உடனடியாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டில் நிகழவிருக்கும் அபாயத்தில் இருந்து நம்மைத் தற்காத்து கொள்ள துணை புரியும்.
ஊடகச் சபை
ஊடகச் சபைக்குப் புத்துயிர் அளித்து அச்சு ஊடகச் சட்டங்களையும் திருத்தம் செய்ய வேண்டும். ஊடகச் சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு பிரிவு 10-இன் கீழ் உத்திரவாதம் அளித்து, சரியாக இது இயங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். இதன் வழி, மக்களுக்குப் போலியான தகவல்கள் ஏதும் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
‘Ombudsman’ முறைமை
‘Ombudsman’ முறைமையை அமலுக்குக் கொண்டு வருவதன் வழி, அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் தவறிழைப்பதைத் தவிர்க்க முடியும்.