கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் நாட்டின் கல்வி முறைமையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், முறையாக வகுப்புகளை நடத்த இயலாமல் கல்வியும் சமமான முறையில் வழங்கப்படவில்லை.
பிந்தைய பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் கல்விச் சீர்த்திருத்தத்தில், கல்வியில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியைக் குறைத்து, கல்வி தரத்தை உயர்த்தி, ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதன் வழி நாட்டில் இருக்கும் இளையோரின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பக் கல்வி
இலவச காலை சிற்றுண்டி
பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருமடங்கு அதிகரித்துள்ளதாக UNICEF கணித்துள்ளது. மேலும், நடப்பில் வசதி குறைந்த மாணவர்களுக்காக இலவச உணவு வழங்கும் திட்டம் இருந்து வருகின்றது. இத்திட்டத்தின் வழி பயனடையும் 500,000 மாணவர்களும் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொண்ட பிறகே தங்களது கல்வியை ஒவ்வொரு நாளும் தொடங்குகின்றனர். எனவே, இத்திட்டத்திற்கான ஒதுக்கப்படும் நிதியானது மேலும் அதிகரிக்கப்படும்.
பிந்தைய பெருந்தொற்று காலத்தில் தொலைந்த தலைமுறையினரின் விழுகாட்டைக் குறைத்தல்
பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் வண்ணம், 3M திறன்களை (Membaca, Menulis, Mengira) மாணவர்களிடையே மதிப்பீடு செய்ய சிறப்பு வரவுச் செலவு ஒதுக்கப்படும். அதே வேளையில், இத்திறனில் இருந்து விடுப்பட்டுள்ள மாணவர்கள் குறிப்பாக வறுமை கோட்டிலும் புறநகர் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கும் கூடுதல் கவனம் வழங்கப்படும். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் வழி இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி மாணவர்களுக்கான மீட்புத் திட்டத்தைச் முறையாக வழிநடந்த ஒரு உந்துகோலாக அமையும். இதன் வாயிலாக, இம்மூன்று திறனில் பிந்தங்கியிருக்கும் மாணவர்களின் விழுகாட்டை குறைக்கலாம்.
ஏழ்மை நிலையில் இருக்கும் பள்ளிகள் குறைக்கப்படும்.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும், தீபகற்ப மற்றும் கிழக்கு மலேசியாவில் கல்வி தேவைகள் சமநிலையில் இல்லை என்பதோடு கிழக்கு மலேசியாவில் வழங்கப்படும் கல்வியின் மீது ஒரு போதும் அக்கறை வழங்கப்படவில்லை என்பதே உண்மை. மலேசியாவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முறையான கல்வியை வழங்க நாட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும் பள்ளிகளுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். இப்பள்ளிகளானவை மறுசீரமைக்கப்படும் என்பதோடு அதற்கான நிதியும் மேலும் அதிகரிக்கப்படும். இதன் வழி, தரமான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பது உறுதி.
ஆசிரியர்களின் சுமையைக் குறைத்தல்
மாணவர்களுக்குத் தரமான கல்வி, முறையாகச் சென்றடைய ஆசிரியர்களுக்கு ஏற்றவாறு அதன் சுற்றுசூழல் அமைந்திருப்பது மிகவும் அவசியமாகும். இனியும் வகுப்பறை கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்கின்றனரா என்று அவர்களின் மீது அதிகப்படியான சுமையை வைப்பது முறையாகாது. குறுகிய காலத்திற்கு, நடைமுறையில் இருக்கும் வழக்கம் தொடரப்படும். நீண்ட காலத்திற்கு, போதுமான உதவித் தொகையுடன் ஒரு உதவியாளரை நியமிப்பதன் வழி, ஆசிரியச் சமூகத்தின் சுமை குறைக்கப்படும்.
கலப்பு பொது கலாச்சார நிகழ்ச்சி (Program Silang Budaya)
பல்லின மக்கள் சுபிட்சமாக வாழும் நாடாக வெளியுலகிற்குத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மலேசியத் திருநாடு தொடர்ந்து அதன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இளம் வயதில் இருந்து மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை மேம்படுத்த பல்வேறு இன மக்களை உட்படுத்திய பல கலப்பு பொது கலாச்சார நிகழ்ச்சிகளில் அனைத்து தேசியப் பள்ளிகள், தாய்மொழிப் பள்ளிகள், சமயப் பள்ளிகள் பங்குப்பெறும்.
நியாயமான முறையில் உதவித்தொகை ஒதுக்கீடு
நாட்டில் இயங்கி வரும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் நியாயமான முறையில் உதவித்தொகை ஒதுக்கீடு செய்யப்படும். அவை பின்வருமாறு:-
Sekolah Kebangsaan, Sekolah Jenis Kebangsaan Cina (SJKC), Sekolah Jenis Kebangsaan Tamil (SJKT), Sekolah Berasrama Penuh, Maktab Rendah Sains MARA, Sekolah Agama Bantuan Kerajaan, Sekolah Mubaligh, Sekolah Tahfiz, Sekolah Agama Rakyat & Sekolah Agama Persendirian, Sekolah Pondok yang berdaftar, Sekolah Menengah Jenis Kebangsaan, dan Sekolah Menengah Persendirian Cina (SMPC)
தாய்மொழி
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் கற்பிக்கப்படும் தாய்மொழி கல்வி மேலும் விரிவாக்கப்படும். இதன் வழி, தாய்மொழி கல்வி பாதுகாக்கப்படுவதுடன், அடுத்து வரும் தலைமுறையினரும் இதன் அவசியத்தை அறிந்து நடப்பர்.
அங்கீகரிக்கப்பட்ட UEC சான்றிதழ்
அங்கீகரிக்கப்பட்ட UEC சான்றிதழைக் கொண்டு அரசாங்கப் பொது கல்விகூடங்களில் விண்ணப்பிக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் SPM தேர்வில் தேசிய மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசாங்க உயர்கல்விகூடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கட்டாய விதியும் பின்பற்றப்படும்.
உயர்கல்வி கூடம்
AUKU சட்டம் இரத்து செய்யப்படும்
தொடர்ந்து மாற்றம் கண்டு வரும் கல்வி திட்டத்தில் மேல்பார்வையிட கல்விகூடங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். எனவே, AUKU இதனால் இரத்து செய்யப்படும் என்பதோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களும் சுய சிந்தனை ஆற்றல் மற்றும் தத்தம் பல்கலைகழகங்கள் சார்ந்த முடிவுகள்/திட்ட வரைவுகளின் மீது முடிவெடுக்கும் சுய அதிகாரங்கள் திருப்பி வழங்கப்படும் (Autonomy)
பி.டி.பி.டி.என் (PTPTN) கல்வி கடன் கட்டம் கட்டமாக இரத்து செய்து மன்னிக்கப்படும்.
B40 குழுமத்தில் இருந்து வரும் மாணவர்களின் கல்வி கடன்சுமையைக் குறைக்கும் வண்ணம், அவர்களது பி.டி.பி.டி.என் என்னும் கல்வி கடன் இரத்து செய்யப்பட்டு மன்னிக்கப்படும். இதன் வழி, இக்குழும மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள கடனைத் திருப்பிச் செலுத்த தேவையில்லை. பி.டி.பி.டி.என் கடனைத் திரும்பச் செலுத்தும் அட்டவனை ரி.ம 4,000-க்கும் மேல் சம்பளத்தை மையமாக கொண்டு அமையும். பிறகு, சமபளத்துக்கு ஏற்ப அதன் விகிதமும் அதிகரிக்கும்.
B40 மாணவர்களுக்கான உதவித்தொகை
அதே வேளையில் B40 குழும மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் அறிமுகப்படுத்தப்படும். இதன் வழி, மாணவர்கள் அனைவரும் பி.டி.பி.டி.என் கடனுதவியைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
மாணவர்களுக்கான வாய்ப்புகளை அதிகரித்தல்
SPM, STPM தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெரும் மாணவர்கள், தத்தம் தகுதிகளுக்கு ஏற்ப அரசாங்க உயர்கல்விகூடங்களுக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்படும்.