கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் நாட்டின் ஏழ்மை குறீயீடு 2019-ல் 5.6% இருந்து 2020 ஆம் ஆண்டு 8.4% உயர்ந்துள்ளது. இதில் 12.5% குடும்பத்தினர் RM 2500-க்கும் குறைவான மாத வருவாய் ஈட்டுகின்றனர். பெருந்தொற்ற்க்கு பிறகு 20% M40 வர்க்கத்தினர் B40 வர்க்கத்திற்கு சரிந்து வந்ததை நம்மால் காண முடிகிறது.
எல்லா நிலைகளினும் ஏழ்மையை துடைத்தொழித்தல்
நம்பிக்கை கூட்டணி இவ்வாறான ஏழ்மை நிலையை முற்றிலுமாக துடைத்து எல்லா நிலையிலும் உள்ள மலேசியர்களை மானமுள்ள சமூகமாக உறுமாற்றும் கணவை கொண்டுள்ளது. அதே நேரத்தில் சமுதாயத்திற்கே மீண்டும் உதவும் கடப்பாட்டையும் கொண்டுள்ளது. அத்தனை படிநிலைகளிலும் உள்ள ஏழ்மையை ஒழிக்கும் அதேவேளை நகர்ப்புற ஏழ்மையை கையாள்வதையும் நாம் உற்று நோக்க வேண்டும்.
சிறுதொகை கடன் உதவி
அனைத்து படிநிலைகளிகலும் நாம் ஏழ்மையை ஒழிக்க வேண்டும். Amanah Ikthiar Malaysia மற்றும் Yayasan Usaha Maju ஆகிய அமைப்புகள் மூலம் நம்மால் சிறு தொகை கடன் உதவிகளை அதிகரிக்க செய்து மக்களுக்கு வழங்கிட முடியும். இதன் மூலம் நம்மால் பின்தங்கியுள்ள மற்றும் ஏழ்மைநிலை சமூக மக்களை வணிக துறையில் ஈடுபடுத்தி ஏழ்மை நிலையை நிவர்த்தி செய்ய முடியும்.
வாழ்க்கை உதவித் தொகை (BSH) மற்றும் இலவச காலை சிற்றுண்டி
BSH எனப்படும் வாழ்க்கை உதவித்தொகை திட்டம் வாழ்க்கை செலவீனங்களை குறைக்க தொடர்ந்து அமல்படுத்தப்படும். அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தபடும். இதன் மூலம் ஏழை மாணவர்கள் கல்வியில் பின் தங்குவதை தடுக்க இயலும்.
மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குதல்
5ல் ஒரு மலேசிய சிறார் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதனை களைய, 6 வயதுக்கு கீழ் சிறார்கள் உள்ள குடும்பத்திற்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும்.
சமுதாயங்கள் பின்தங்குவதை தடுத்தல்
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வறுமை நிலையை ஒழிக்க கொண்டுவரப்பட்ட MySalam மற்றும் Program Kasih Suri Malaysia போன்றவையின் மூலம் தேவைப்படும் சமூக மக்கள் அடையாளம் காணப்பட்டு உதவிகள் வழங்கப்படும்.
நகர்ப்புற ஏழ்மை
வேறுப்பட்ட சவால்களை எதிர்கொள்வதால், நகர்ப்புற ஏழ்மைநிலையை வேறு கோணங்களில் பார்வையிடுவதோடு அவற்றை களைய மாறுப்பட்ட முணைப்பு காட்ட வேண்டும்.
வாங்கும் அல்லது வாடகைக்கு ஏற்ற விலையில் வீடுகள்
வாங்க மற்றும் வாடகை எடுக்க முடிந்த விலையில் குறைந்த அல்லது நடுத்தர விலையிலான வீடுகள் உருவாக்கப்படும். Rumah Transit எனப்படும் தற்காலிக வீடுகள், மக்கள் நிரந்தர குடியிருப்புகளுக்கு செல்வதற்கு முன்பு ஏதுவாக அனத்து உள்ளூர் நகராட்சிகளிலும் அமைக்கப்படும்.
குமுகாய சுகாதார இருத்தலை கிடைக்கபெறுமாறு செய்தல்
அதிகமான சுகாதார கிளினிக்குகள் மக்கள்தொகை அதிகமுள்ள வறுமையான பகுதிகளில் கட்டித் தரப்படும். சுகாதார பரிசோதனை திட்டங்கள் வீடு வீடாக, குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.
பாதுகாப்பான உறைவிடம் மற்றும் குமுகாய சமையல் விடுதிகள்
நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழ்மையான ஒற்றை துனையிழந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு பாதுக்காப்பான உறைவிடம் (பள்ளிகளில் இல்லாத நேரங்களில்) இல்லாமல் தடுமாறி வருகின்றனர். எனவே, நம்பிக்கை அரசாங்கம் அரசு சாரா இயக்ககங்களின் துணையுடன் பாதுகாப்பான உறைவிடங்களை அமைக்க வழிவகை செய்யும். இக்குழந்தைகளுக்கு உணவளிக்கும் வகையில் குமுகாய சமையல் விடுதிகளும் வறுமை நிலை குடும்பங்களின் சுமையை குறைக்க கட்டித்தரப்படும்.
குமுகாய காவல் பணிகள்
Rukun Tetangga எனப்படும் குமுகாய காவல் பணிகள் போன்ற ஒரு காவல் திட்டமானது இவ்வாறான வரிய மக்கள் வாழும் வீடமைப்பு பகுதிகளில் முடுக்கி விடப்படும். இவ்வாற்றான காவல் ரோந்து பணிகள் பாதுகாப்பை அதிகரிக்க செய்வதோடு சமுதாயத்தில் நிலவும் குற்றச்செயல்களையும் குறைக்க இயலும். மக்களின் இவ்வாறான பங்களிப்பும் மிகவும் சிறந்ததொரு திட்டம் என்பதோடு வரிய நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நம்மால் உயர்த்த இயலும்.