இளையோர் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

நாட்டின் எதிர்காலத்தின் அடித்தளமாக அமைவது இளைஞர்களே ஆவர். இளைஞர்களுக்கு பொருளாதாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை நம்மால் ஊக்குவிக்க இயலும். பொருளாதாரத்தில் இளைஞர்களின் பங்கேற்பானது நாட்டின் வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்க செய்யும் விளைவினைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இளைஞர்கள் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பதை எளிதாக்க நம்பிக்கை கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அவற்றில் சேவை சுயதொழில் (Gig) பொருளாதாரம்,  விவசாயம், பசுமைச் சார்ந்த தொழில் (Industri Hijau) மற்றும் பராமரிப்புத் துறை போன்ற பாரம்பரியமற்ற பொருளாதாரப் பகுதிகளை உள்ளடக்கிய வேலைகளுக்கும் உதவி அல்லது ஊக்கத்தொகைகளை வழங்கிட வேண்டும்.

B40 உதவித்தொகை

PTPTN போன்ற கடனுதவிகளை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைக்க நம்பிக்கை கூட்டணி B40 வர்க்க மக்களுக்கான உதவித்தொகையை அறிமுகப்படுத்தும்.

முன்னோடி (Apprentice) உதவித்தொகை

நம்பிக்கை கூட்டணியானது “பராமரிப்பாளர், குழந்தைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பாளர்”, நவீன விவசாயத் துறை மற்றும் பசுமைத் துறை போன்ற புதிய பொருளாதாரத் துறைகளில் ஈடுபட ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முன்னோடி உதவித்தொகை மற்றும் திறன் மேம்பாட்டு (Upskilling) வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்தும்.

வணிகவியலை ஊக்குவித்து வளர்ச்சியுற செய்தல்

உடலுழைப்பு மற்றும் சுய சேவை (Gig) தொழிலாளர்களுக்கு, தொழில் மேம்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். SPM பட்டதாரிகள் மற்றும் அதற்குக் கீழே உள்ள கல்வித் தகுதியை பெற்றிருப்பவர்களுக்கு, TVET திறன் கல்வியில் தங்கள் படிப்பைத் தொடர ஊக்குவிக்கப்படும். சுய சேவை (Gig) வேலைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சுய சேவை தொழிலாளர்களின் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தினால் அந்நிறுவங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

வேலை முன்னேற்ற அமைப்புமுறை

தொழில் முனைவோராக தங்களை உயர்த்திக் கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சிறப்பு நிதி, பயிற்சி திட்டங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களிடையே தொழில் முனைவோர் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.

இந்தக் கட்டுரையைப் பகிர: