அனைத்துலக நிலையில் மலேசியாவின் உயரிய நிலை

ஐ.நா சபை, காமன்வெல்த், ஐக்கிய இசுலாமிய நாடுகள் (OIC) மற்றும் NAM போன்ற சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ள மலேசியா உலக அரங்கில் மிகவும் துடிப்புடன் செயல்படும் ஒரு நாடாகும். மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், சர்வதேச பிரச்சனைகளுக்காக போராடுவதில் அதிக முனைப்பு காட்டுவதோடு, மலேசியாவின் கருத்துக்களும் பிற நாடுகளால் உயர்வாக மதிக்கப்படுகின்றன.

எனினும், சர்வதேச ஊடகங்களில் விரிவான பார்வையை ஈர்த்திட்ட 1MDB ஊழல் உட்பட பல உயர்மட்ட ஊழல்களைத் தொடர்ந்து நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் அவப்பெயரை அழித்து, மலேசியாவை மற்ற நாடுகள் பின்பற்ற கூடிய ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உலக அரங்கில் மலேசியாவின் பெருமையை மீண்டும் நிலைநிறுத்தவும், அனைத்து தரப்பு மக்களிடையே தேசப்பற்று மற்றும் பெருமை உணர்வை மேலோங்கிட செய்யவும் நம்பிக்கை கூட்டணி உறுதியாக உள்ளது. இதன் மூலம் நாம் அனைத்துலக நிலையில் உலக மக்களோடு சரிசமமான நிலையில் இருத்தலை உறுதி செய்ய முடியும்.

மாற்றத்திற்காக விரைந்து செயலாற்றல்

நம்பிக்கை கூட்டணி தனது உயரிய கடப்பாடான, புதிய மற்றும் சிறந்த மலேசியாவை உருவாக்கும் தனது உறுதிப்பாட்டை தொடரும். தாராளவாத மற்றும் முற்போக்கான பன்மைத்துவ சமுதாயத்தை மீட்டெழுப்புதல், மலேசிய கூட்டமைப்பின் உண்மை உணர்வுகளை வளர்த்தல், நாட்டின் முக்கிய தூண்களை சீர்திருத்தல், ஒருமைப்பாட்டினை வளர்த்தல், கண்ணியத்தை உயர்த்தல் மற்றும் நீதித்துறை மற்றும் சட்டமன்ற அவைகளின் சுதந்திரத்தை மதித்தல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

மாபெரும் தாக்கமிக்க நடுமை சக்தியாக நாட்டை உருமாற்றல் (Influential Middle Power)

பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய ஒரு நடுத்தர சக்தியாக மலேசியாவை நிலைநிறுத்துதல். நடுநிலைக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம், வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்தக்கூடிய இருதரப்பு உறவுகளை மேலும் ஊக்குவிப்போம். நம்பிக்கை கூட்டணியானது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடிய வெளி சக்திகளின் தலையீட்டைத் தடுக்கவும், உலகின் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களில் மலேசியா சிக்கிக் கொள்வதைத் தடுக்க்கும் வகையில் செயல்படும்.

ASEAN பிராந்தியத்தோடு நாம்

நம்பிக்கை கூட்டணி ASEAN-ஐ உலகின் முக்கிய வர்த்தகக் குழுவாகவும் பிராந்திய ஒத்துழைப்பாகவும் ஊக்குவித்து, பிராந்திய நலன்களுக்காகப் போராடுவதில் ஆசியானின் முக்கியமான மற்றும் உறுதியான உறுப்பினராக மலேசியா தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யவும் கடப்பாட்டினை கொண்டுள்ளது.

இந்தக் கட்டுரையைப் பகிர: