ஒட்டு மொத்த மலேசிய மக்கள் தொகையில் 15% மாற்றுத் திறனாளிகள் ஆவர். ஆகையால், நாட்டின் மேம்பாட்டிற்கு அவர்களை புறக்கணித்தலாகாது. உடலளவிலும் மனதளவிலும் இவர்கள் குறைபாடு கொண்டிருந்தாலும் நாட்டின் அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பங்களிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சுற்றுசூழல் அமைந்திருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கூட்டணி கவனம் செலுத்துகின்றது. இதன் வழி, மாற்றுத் திறனாளிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதில் இருந்து ஒதுக்கப்பட மாட்டார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பை நிறுவ வேண்டும்.
வருங்காலங்களில் மாற்றுத் திறனாளிகளும் தரமான வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கு, தற்போது இவர்கள் எதிர்நோக்கும் கட்டமைப்புக் குறைபாடு, முறையான கல்வி அமைப்பு இல்லாமை பொன்றவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். எனவே, இதனைக் களைய மாற்றுத் திறனாளிகளுக்கென ஓர் இயக்கத்தை நிறுவி அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்பிக்கை கூட்டணி எண்ணம் கொண்டுள்ளது.
மலேசிய மனித உரிமை ஆணையத்தில் (SUHAKAM) மாற்றுத்திறனாளி சிறப்பு அதிகாரி (Pesuruhjaya)
மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் வண்ணம், மலேசிய மனித உரிமை ஆணையத்தில் (SUHAKAM) மாற்றுத் திறனாளிகளும் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யபட வேண்டும். இந்த நியமனத்தின் வாயிலாக, மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகப்படும்.
மாற்றுத் திறனாளிகளின் அணுகல்
மாற்றுத் திறனாளிகள் பொது போக்குவரத்தில் பயனிக்கும் போது போதுமான வசதிகள் அனைத்துலக தர கட்டமைப்பின்படி (Universal Design) செய்து கொடுக்கப்பட வேண்டும். இதன் வழி, மாற்றுத் திறனாளிகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது எந்த ஒரு இடையூறு இல்லாததை உறுதி செய்ய முடியும்.
மாற்றுத் திறனாளிகள் சிறப்புக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு அமையப் போகின்றது. இதன் வழி, மாற்றுத் திறனாளிகள் சிறப்புக் கல்விக்காக எடுக்கப்படும் முயற்சிகள் தடையின்றி மேற்கொள்ளப்படும். இந்நிதியின் மூலம் சிறப்பு கல்வி ஆசிரியர் பயிற்சி, கட்டுமானம், வகுப்பறை தளவாடம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும்.