விளையாட்டுத் துறையானது முதன்மையான முதலீடாகும். இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி கட்டமைப்பை மறுசீரமைத்தல் மூலம் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் நலன் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, பங்குதாரர்களின் ஈடுபாடு, சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் திறமைகளை மெருகூட்டுவதற்குக் கவனமாக திட்டமிடுதல் ஆகியவை விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதுடன் மலேசியாவையும் செழுமைப்படுத்தும்.
நம்பிக்கைக் கூட்டணி மலேசியாவில் உள்ள அனைத்து வகையான விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தேசிய விளையாட்டுகளை கண்ணியப்படுத்துவதைத் தொடரும்.
விளையாட்டுப் பயிற்சி மையம்
மலேசியாவை உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டுப் பயிற்சி இடமாக நிலைநிறுத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வளாகங்களை மேம்படுத்துதல். இந்த விளையாட்டு வசதி, விளையாட்டு வீரர்கள் மேம்பட்ட விளையாட்டு பயிற்சி மற்றும் மறுவாழ்வு பெற சமீபத்திய தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விளையாட்டு வீரர்கள் உயர்தர விளையாட்டு பயிற்சி மற்றும் மறுவாழ்வு அனுபவத்தை பெற முடியும்.
மின் விளையாட்டு அமைப்பின் தனித்துவத்தை மேம்படுத்துதல்
தற்போதுள்ள மின் விளையாட்டின் அமைப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ‘Level-Up’ மற்றும் ‘EPIC’ போன்ற பெரிய அளவிலான வருடாந்திர நிகழ்ச்சிகளின் இணைப்பு, மின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். ‘Valve’ மற்றும் ‘Tencent’ போன்ற ஜாம்பவான்களும் பங்கேற்கும்.
இ-ஸ்போர்ட்ஸ் சுற்றுச்சூழலுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து வழக்கமான விவாதங்களை நடத்துவதன் மூலம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஈ-ஸ்போர்ட்ஸ் பங்குதாரர்களை ஈடுபடுத்துங்கள்.
விளையாட்டு சார்ந்த சுற்றுலாத் துறை
மின் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவை வழங்குவதோடு, சர்வதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் மின் விளையாட்டு வீரர்களுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்ப செயல்முறையை சீரமைத்து எண்மியலாக்குதல். இது விளையாட்டு சார்ந்த சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவை வழங்கும். இதனால் நாடு முழுவதும் கிடைக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
தொழில் மேலாண்மை திறன்
அறிவு மற்றும் மனித திறன்களுடன் சாத்தியமான மின்-விளையாட்டு வீரர்களை தயார் செய்தல். அவர்களின் ஈடுபாட்டின் தொடக்கத்தில், விளையாட்டு வீரர்களுக்கு நிதி மேலாண்மை திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன்களைக் கற்றுத் தருதல். இதனால் தரமான விளையாட்டு செயல்பாட்டையும் மின்-விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பையும் உருவாக்க முடியும்.
அனைவருக்கும் பொதுவான விளையாட்டு
விளையாட்டு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மக்கள் அணுகுவதை எளிதாக்குதல். இதனால் விளையாட்டு கலாச்சாரத்தை நிதர்சனமாக்குதல்.
விளையாட்டுத் திறமை
அடிமட்டத்தில் உள்ள விளையாட்டுத் திறமையாளர்கள் விளையாட்டில் மிகவும் வெளிப்படையாகப் பங்குபெறுவதற்கான இடத்தையும் வாய்ப்புகளையும் வழங்குதல்.
ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள்
தேசிய தடகள நலன் அறக்கட்டளை (YAKEB) உடன் இணைந்து முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புத் திறன் மற்றும் தொழில் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்துதல்.