இன்றைய சவால் நிறைந்த புவிசார் அரசியல் காலகட்டத்தில், தேசிய பாதுகாப்பு என்பது
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் திறமையான முறையில் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு இடமின்றி கையாளப்பட வேண்டிய ஒரு சிக்கலான பிரச்சினையாக மாறியுள்ளது. சமீப காலத்தில் நடந்தேறிய சில தேசிய பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களை எடுத்துகாட்டாக கொண்டு, நாம் இதில் உள்ள சிக்கல்களை களைய புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
நம்பிக்கை கூட்டணி தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவர முனைப்பு கொண்டுள்ளது. இச்சீர்திருத்தமானது அனைத்து பிரிவினரின் ஈடுபாட்டிற்கும் திறந்த மனப்பான்மைக்கும் வித்திடும் அதே வேளை தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எந்தவொரு ஊறும் விழையாமல் இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு என்பது இரகசியமாக மூடி மறைக்கப்படாமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் ஏனெனில், அது ஒவ்வொரு அடுக்கு மக்களின் நலன்களையும் உள்ளடக்கியது என்றால் அது மிகையாகாது.
ஒற்றை எல்லையோர அமைப்பு (Agency)
ஒற்றை எல்லையோர அமைப்பை நிறுவுதல் மற்றும் எல்லை ஒழுங்குமுறை சிக்கல்களை கையாள பெரும் தரவு பயன்பாடு (Big Data) மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல். இந்த நடைமுறை பல நாடுகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு எல்லையோர பாதுகாப்பு நிர்வகிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
தேச பாதுகாப்பு வெள்ளை அறிக்கை (Defence White Paper)
2019 இல் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு வெள்ளை அறிக்கையின் வழிகாட்டுதலின்படி ஆயுதப்படைகளின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நவீனமயமாக்கல் திட்டவரைவு மேற்கொள்ளப்படும்.
கூட்டு நிலைத்திறன் (Capacity) திட்ட வரைவு
நிலம், கடல் மற்றும் வான்படைகளில் வெளிப்புற அச்சுறுத்தல்களை தவிர்க்கவும், அவர்களின் இடையிலான ஒத்துழைப்பின் தொடர்ச்சியை உறுதி செய்யவும் பொருத்தமான நீண்டகால நிதியுதவி திட்டத்துடன் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டு திறன் திட்டத்தை (tri-service) உருவாக்க முனைப்பு காட்டப்படும். இவை ஏற்கனவே நடந்தேறிய கம்யூனிச பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து தற்காக்கும் போர் யுக்தியிலிருந்து வேறுபட்ட பரிமாணத்தை கையாளும் வகையில் இருக்கும்.
அரசாங்க மற்றும் பாதுகாப்பு துறை கொள்முதல்கள்
பாதுகாப்புச் சொத்துக்களைக் கொள்முதல் செய்வதிலும், அவற்றை செவ்வனே பராமரிப்பதிலும் அடிக்கடி ஏற்படும் ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை முற்றிலுமாக களைய, அரசு கொள்முதல் சட்டத்தை இயற்றுவதோடு, பாதுகாப்பு உபகரண கொள்முதல் செயல்முறையும் மாற்றியமைக்கப்படும்.
பாதுகாப்பு உறுப்பினர்களின் நலன் காத்தல்
பாதுகாப்புப் பணியாளர்களின் நலன் மற்றும் படைவீரர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு பணிக்கு பிந்தைய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் குறித்து தரமான ஆய்வுகளை மேற்கொள்ள இருதரப்பு நாடாளுமன்றக் குழுவை அமைத்தல்.
பாதுகாப்பு உறுப்பிய திறன் திட்ட வரைவு (Rangka Tindakan Kapasiti Pertahanan- RTKP)
மனித வளங்கள் தொடர்பாக தற்போது அமலில் உள்ள கொள்கையை மறுஆய்வு செய்து, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடவும், பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதிசெய்வதற்கும், பாதுகாப்புத் திறன் செயல் திட்டத்தை (RTKP) உருவாக்குதல்.
தேசிய பாதுகாப்பு துறை கொள்கை திட்டம் (Dasar Industri Pertahanan Negara-NDIP)
தேசிய பாதுகாப்புத் துறை கொள்கையை (NDIP) உருவாக்குதல் மூலம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலாக அமைவதோடு இவ்வம்சங்களை தொட்டு மூன்றாம் நபர்களை (Pihak Luar) நாம் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் இது உறுதி செய்யும். அதே நேரத்தில் இத்திட்டமானது, ஒரு விரிவான தேசிய பாதுகாப்பு சுற்றுச்சூழலை அமைத்திட நமக்கு மிகவும் உறுதுணையாகவும் இருக்கும்.
கிழக்கு சபா கடற்கரை சிறப்புப் பாதுகாப்புப் ஆனையம் (Eastern Sabah Security Command- ESSCOM)
கிழக்கு சபா நீரினையின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட கிழக்கு சபா கடற்கரை சிறப்புப் பாதுகாப்புப் ஆனையத்தின் (ESSCOM) பங்குகளை வலுப்படுத்தி அதன் உபகரணங்களை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தனிநபர் தரவுகளுக்கான காப்பு
தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (PDPA) படி மக்களின் தனிப்பட்ட தரவுகளில் எந்தவொரு கசிவும் ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மோசடி நடவடிக்கைகள் (Scam( போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க அமலாக்க அமைப்புகளை நெறிப்படுத்துதல்.
எல்லை தற்காப்பு அறண்
படையெடுப்பு, கடத்தல் மற்றும் மனிதர்களை கடத்துதல் போன்றவற்றிலிருந்து நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதை மேம்படுத்துதல். மேலும், பாதுகாப்பு துறையின் சொத்து தேவைகள் மற்றும் உபகரணங்களை மதிப்பிடுதல் மூலமும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களை அதிகரிப்பதன் மூலமும் இதை சரியாக அமல்படுத்த முடியும்.
IPCC-ஐ வலுப்படுத்துதல்
காவல்துறையில் மனித வள மேம்பாடு, கட்டமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய Dzaiddin அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப IPCC-யின் அதிகாரத்தை பலப்படுத்துதல்.