கோவிட் பெருந்தொற்று காரனமாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறை (PMKS) மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் முடிவுக்கு வந்தாலும், PMKS துறை இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை.
இந்தத் துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் கொள்கைகள் மூலம் PMKS துறையை நாம் மீட்டெடுக்க முடியும். PMKS இன் மீட்சி மற்றும் வளர்ச்சியானது, PMKS எந்த அதிர்ச்சியையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும், பொருளாதாரத் துறையில் தொடர்ந்து பங்களிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
தொழிலாளார் வளம்
PMKS செயல்பாடுகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்.
எண்மியல் மையம்
PMKS மத்தியில் எண்மியல் மாற்றம் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக, எண்மியமயமாக்கல் ஊக்குவிப்புகளுக்கு விண்ணப்பிக்க சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவ, ஒரு நிறுத்த எண்மியல் மையத்தை நிறுவுதல்.
உற்பத்தித்திறன் அதிகரிப்பு
தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் மூலதனப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க PMKSக்கான குறிப்பிட்ட உற்பத்தித் தீர்வுகளுக்கான ஊக்கத்தொகைகள் அல்லது மானியங்களை வழங்குதல். தகுதியான செலவுகளில் தொழில்நுட்ப உபகரணங்கள், எண்மிய சந்தைப்படுத்துதல் கருவிகள்/தீர்வுகள், ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப சேவைகள் வாங்குதல் ஆகியவை அடங்கும்.
மூலதன நிதி
உயர் தொழில்நுட்பத் துறையில் உள்ள தொழில் முனைவோர் தங்கள் PMKS செயல்பாடுகளைத் தொடங்க ஊக்குவிப்பதற்காக, மூலதனத்திற்கான (VC) நிதியுதவி ஒதுக்கீடுகளை அவ்வப்போது அதிகரித்தல்.