ஜனநாயகத்தின் முக்கியமான வழிகாட்டல்களில் ஒன்று ஊடகங்களின் ஆற்றலாகும். சுதந்திரமாகத் தற்போதைய பிரச்சினைகள் குறித்து சுயாதீனமாக புகார் கொடுப்பது பொது ஊடக சுதந்திரமாகும். அது பறிக்கப்படும்போது ஜனநாயகத்தின் முக்கியமான செயல்பாடு பாதிக்கப்படும். மோசமான விளைவுகள் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பசுத்துவதோடு சரியான தகவலையும் அணுக முடியாது.
நம்பிக்கைக் கூட் டணி முக்கிய கோட்டைகளில் ஒன்றைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. ஊடக சுதந்திரம், பேச்சு உரிமை போன்றவைப் பாதுகாக்கப்படும்.
அடக்குமுறை சட்டத்தை ரத்து செய்தல்
தேசத் துரோகச் சட்டம் 1948, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் சட்டம் 1984 உள்ளிட்ட கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்க தவறாகப் பயன்படுத்தக்கூடிய அடக்குமுறைச் செயல்களின் விதிகளைத் திருத்தலும் ரத்து செய்தலும்.
ஊடகச் சபை
ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகப் பயிற்சியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, ஊடகப் பிரமுகர்களைக் கொண்ட ஊடகக் குழுவை நிறுவுவதற்கான முயற்சிகளைப் புதுப்பித்தல்.
தகவலாளியைப் பாதுகாத்தல்
தகவல் ஊடுபவர்கள் முறைகேடுகளை நேரடியாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்த அனுமதிக்கும் வகையில், தகவல் வெளியிடுபவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துதல். உடனடியாகச் செயல்படுத்தப்படும் திருத்தங்கள் ஒருமைப்பாடு பிரச்சினைகளுக்கு ஒரு கட்டுப்பாட்டு பொறிமுறையை உருவாக்குதல் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு கசிவும் ஆரம்ப கட்டத்தில் தடுக்கப்படும்.
தகவல் அறியும் சட்டம்
தகவல் அறியும் சுதந்திரச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விஷயங்களைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் (OSA) பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல். இதில் வகைப்பாடு என்பது நாடாளுமன்றக் குழுவின் முடிவிற்கு உட்பட்டதாகும்; அமைச்சரின் விருப்பத்திற்கு அல்ல.