இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம்

இளைஞர்கள் நாட்டின் நம்பிக்கை எனும்போதும் நமது நம்பிக்கையை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு நல்ல ஒரு அடித்தளம் தேவை. இளைஞர்கள் தொடர்பான அரசியல் கொள்கைகள் இளைஞர்களின் வளர்ச்சிப்பாதை மற்றும் முன்னேற்றத்தை வளர்ப்பதை அடிப்படையாக கொண்டு அவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இளைஞர்கள் செம்மையுற்ற வாழ்வை வாழ மலேசியாவை சிறந்ததொரு இடமாக கட்டமைத்திட முடியும் என்று நம்பிக்கை கூட்டணி திண்ணமாக நம்புகிறது. இவ்வாறு இளைஞர்களின் வளப்பத்தை உறுதி செய்வதன் மூலம் தேசத்தின் கணவை நனவாக்கும் கொள்கைகளை நாங்கள் செவ்வனே வரையறை செய்கிறோம்.

இளையோர் அட்டை (KAD BELIA)

இளையோர் அட்டை என்பது தற்போதுள்ள மாணவர் அட்டையில் இருந்து மேம்படுத்தப்பட்டு 13 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களால் பயன்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக மையங்களில் இவ்வட்டையை வைத்திருப்பவர்கள் பல்வேறு கழிவு விலை மற்றும் தள்ளுபடிகளை அனுபவிக்க தகுதி பெறுவர்.

KEMBARA SISWA திட்டம்

பண்டிகைக் காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் KEMBARA SISWA திட்டம் அறிமுகப்படுத்தபடும். சபா அல்லது சரவாக் மற்றும் தீபகற்பத்திற்கு இடையெ பயணிக்கும் விமானங்களின் விமான கட்டணம் ஒரு நிலையான விலையில் (RM199) நிர்ணயம் செய்யப்படுதல் வேண்டும். இத்திட்டமானது, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 2 கட்டண சீட்டுகள் என்ற வரம்புடன் அமலுக்கு வரும்.

வீடுகளை உறுதி செய்தல்

இளைஞர்களிடையே வீட்டுவசதி தேவைக்கான சுமையைக் குறைக்க உதவுவதற்காக, நம்பிக்கை கூட்டணி இளைஞர் தற்காலிக வீடுகள், குறைந்த விலையில் வாங்கும் அல்லது வாடகைக்கு எடுக்கவல்ல வீடுகள், மலிவு மற்றும் நடுத்தர விலை வீடுகளை தேவைப்படும் இடங்களில் வழங்குவதில் முக்கிய கடப்பாட்டை கொண்டிருக்கும்.

விளையாட்டு மற்றும் கேளிக்கைகளை எளிதில் அனுக வழிவகை செய்தல்

இளையோரின் வேலை-வாழ்க்கை சமநிலைக்கு தேவையான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல். பொழுதுபோக்கு பூங்காக்கள், பொது விளையாட்டு வசதிகள், நூலகங்கள், எண்மிய வள மையங்கள் மற்றும் இளைஞர்களின் பயன்பாட்டிற்கான நிகழ்வு இடங்கள் போன்ற பொது இடங்களை மேலும் அதிகரிக்க செய்தல்.

சமுக ஆர்வல சுதந்திரத்தை உறுதி செய்தல்

இளைஞர்கள் அல்லது இளைஞர்கள் தலைமையிலான சமூக அமைப்புகள், நலன் மற்றும் பொது அறிவுசார் செயல்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் இளைஞர்களின் செயல்பாட்டிற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.

திறன் கல்வி பயிற்சி கணக்குகள்

HRD Corp இன் கீழ் 18 முதல் 30 வயதுடைய இளைஞர் தொழிலாளர்களுக்கு RM500 உடன் “திறன் கல்வி பயிற்சி கணக்குகளை” திறக்க வழிவகை செய்வதோடு, அது வாழ்நாள் முழுவதும் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படலாம் எனும் நிலையில் இருக்கும்.

இந்தக் கட்டுரையைப் பகிர: