அனைத்து அரசு துறைகளிலும் மக்களாட்சி, கண்ணியம் மற்றும் மக்களின் பங்கெடுப்பு

மலேசியாவில் உள்ள நகரங்களின் ஆண்டு வரவு செலவு திட்டமானது ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் ரிங்கிட்டை தாண்டும் என்பது நிதர்சனம். சிலாங்கூர் (RM 2.34 பில்லியன்), ஜோகூர் (RM 1.95 பில்லியன்) மற்றும் பெர்லிஸ் (RM 306.83 மில்லியன்) போன்ற மாநிலங்களின் வரவுசெலவுத் திட்டங்களை விட ஒரே ஒரு கோலாலம்பூர் மாநகரத்திற்கான (DBKL) வரவு செலவு திட்ட கணக்கு மட்டும் ஆண்டுக்கு RM 3 பில்லியனை எட்டுகிறது.

இவ்வளவு பெரிய செலவுகள் வரவு செலவு அறிக்கைகளில் தாக்கல் செய்யப்பட்ட போதும், பெரிய நகரங்களில் உள்ள மக்களுக்கு கோலாலம்பூர் உட்பட உள்ளூர் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி உரிமை இன்றும் வழங்கப்படவில்லை. இது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். இதன் காரணமாக, பொறுப்பற்றவர்கள் கொள்ளையடித்தல் மற்றும் பெரிய வரவு செலவு திட்டங்களில் இருந்து வளங்களையோ பணத்தையோ திருடுபவது போன்ற அவல நிலைகளை மக்கள் சந்திக்க நேரிடுகிறது.

DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநாகராட்சி நிர்வாகம் ஏதோ ஒரு தனியார் நிறுவனம் போல் சுய இலாபம் தேடுவதை நம்மால் கண்கூடாக காணமுடியும். கட்டுமான நிறுவங்கள் (Developers) வழங்கும் பனத்திற்கும் அதனால் வரும் இலாபத்திற்கும் சொந்த மக்களின் தேவைகளை விட அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, மக்களின் நலன்களைப் பாதுகாக்க நமக்கு மிகவும் பயனுள்ள ஜனநாயக தேர்ந்தெடுக்கும் முறை தேவை. மலேசியர்கள் தங்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் அரசாங்க மட்டத்தில் ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபட உரிமை உண்டு.

மக்களின் ஜனநாயக பங்களிப்பை அதிகரித்தல்

நம்பிக்கை கூட்டணி ஒரு நிலையான மற்றும் திறந்த தளத்தின் மூலம் அனைத்து மட்டங்களிலும் பொது மக்களின் மக்களாட்சி ஈடுபாட்டை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளது. குறிப்பாக, மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளூர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்ளூர் கொள்கைகள் போன்றவை மக்களின் நலத்திட்டங்களை சார்ந்து இருந்தால் மக்களின் குரலும் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்றாக அமைகின்றது. 

உள்ளூர் சுய மக்களாட்சியை நோக்கி செயல்படுதல்

நம்பிக்கை கூட்டணி மலேசியாவில் உள்ள அனைத்து உள்ளூர் அரசாங்கங்களிலும் முறையான கட்டமைப்பின் மூலம் ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்த கடுமையாக உழைக்கும். இந்த முயற்சி அனைத்து மலேசியர்களுக்கும் நம்பகமான, மக்களை உள்ளடக்கிய மற்றும் மக்கள் நலன்களை முன்னிலை படுத்தும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இவர்கள் மக்களின் தேவைகளையே முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்பதோடு கட்டுமான நிறுவங்களுக்கு (Developers) அல்ல என்பதும் திண்ணம்.

இந்தக் கட்டுரையைப் பகிர: