அனைத்துலக நிலையில் மலேசியாவின் உயரிய நிலை

ஐ.நா சபை, காமன்வெல்த், ஐக்கிய இசுலாமிய நாடுகள் (OIC) மற்றும் NAM போன்ற சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ள மலேசியா உலக அரங்கில் மிகவும் துடிப்புடன் செயல்படும் ஒரு நாடாகும். மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், சர்வதேச பிரச்சனைகளுக்காக போராடுவதில் அதிக முனைப்பு காட்டுவதோடு, மலேசியாவின் கருத்துக்களும் பிற நாடுகளால் உயர்வாக மதிக்கப்படுகின்றன. எனினும், சர்வதேச ஊடகங்களில் விரிவான பார்வையை ஈர்த்திட்ட 1MDB ஊழல் உட்பட பல உயர்மட்ட ஊழல்களைத் தொடர்ந்து நாட்டின் நற்பெயருக்கு களங்கம் […]

நாட்டின் பாதுகாப்பு

இன்றைய சவால் நிறைந்த புவிசார் அரசியல் காலகட்டத்தில், தேசிய பாதுகாப்பு என்பது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் திறமையான முறையில் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு இடமின்றி கையாளப்பட வேண்டிய ஒரு சிக்கலான பிரச்சினையாக மாறியுள்ளது. சமீப காலத்தில் நடந்தேறிய சில தேசிய பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களை எடுத்துகாட்டாக கொண்டு, நாம் இதில் உள்ள சிக்கல்களை களைய புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். நம்பிக்கை கூட்டணி தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவர முனைப்பு கொண்டுள்ளது. இச்சீர்திருத்தமானது அனைத்து பிரிவினரின் ஈடுபாட்டிற்கும் […]

அரசு துறைகளை கணினி மயமாக்கல் : அரசு துறைகளில் வேலை பளுவை குறைத்தல் மற்றும் தரமான சேவையை வழங்குதல்

இன்றைய டிஜிட்டல் உலகில் ‘கச்சா எண்ணெய் விலையை விட தரவுகள் இன்னும் விலைமதிப்பு மிக்கது’ எனும் தற்போதைய காலக்கட்டத்தில், தேசிய முன்னனியின் கீழ் உள்ள நடப்பு அரசாங்கம் இன்னும் ‘அரசாங்கத்திற்கு எல்லம் தெரியும்’ (government knows best) என்ற மமதையில் உள்ளது. இத்தகைய நிர்வாகக் கலாச்சாரம் காலாவதியானது மட்டுமின்றி மலேசியா மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் முற்றிலுமாக நிலைக்குழைய செய்துள்ளது. நம்பிக்கை கூட்டணியின் கொள்கை தத்துவம் மாறுபட்ட ஒன்றாகும். இப்புதிய கொள்கை திசையானது திறந்த தரவு […]

அனைத்து அரசு துறைகளிலும் மக்களாட்சி, கண்ணியம் மற்றும் மக்களின் பங்கெடுப்பு

மலேசியாவில் உள்ள நகரங்களின் ஆண்டு வரவு செலவு திட்டமானது ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் ரிங்கிட்டை தாண்டும் என்பது நிதர்சனம். சிலாங்கூர் (RM 2.34 பில்லியன்), ஜோகூர் (RM 1.95 பில்லியன்) மற்றும் பெர்லிஸ் (RM 306.83 மில்லியன்) போன்ற மாநிலங்களின் வரவுசெலவுத் திட்டங்களை விட ஒரே ஒரு கோலாலம்பூர் மாநகரத்திற்கான (DBKL) வரவு செலவு திட்ட கணக்கு மட்டும் ஆண்டுக்கு RM 3 பில்லியனை எட்டுகிறது. இவ்வளவு பெரிய செலவுகள் வரவு செலவு அறிக்கைகளில் தாக்கல் செய்யப்பட்ட […]

சபா மற்றும் சரவாக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி முதலீடுகளை ஊக்குவித்தல்

கோவிட்-19 தொற்று முடிவுக்கு வந்த பிறகு நாட்டின் வேலையின்மை விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சபாவில் குறிப்பாக கடந்த ஆண்டு 9% வரை வேலையின்மை விகிதத்தை பதிவு செய்தது. வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகவும், முதலீட்டாளர்களின் வருகையை ஈர்ப்பதற்கும், அதன்பிறகு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உள்கட்டமைப்பு மற்றும் தளவாட வசதிகளை (Logistics) மேம்படுத்துவது தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நம்பிக்கை கூட்டணியானது, சபா மற்றும் சரவாக்கின் வேலையற்ற மக்கள் தத்தம் வேலைகளைப் பெற்று தங்கள் குடும்பத்தை […]

சபாவில் அதிகமான அந்நிய குடியேறிகளின் வருகையால் ஏற்படும் சிக்கல்களை களைதல்

நாட்டின் எல்லைகள் மிகவும் சுலபமாக ஊடுருவும் வகையில் அமைந்திருப்பதால், சபாவில் அதிகமான அந்நிய குடியேறிகளின் சட்டவிரோத வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு குடியேறும் அந்நிய குடியேறிகளின் விளைவாக சபாவில் அதிகமான குமுகாய சீரழிவிற்கு இட்டு செல்லும் குற்றச்செயல்கள் நிறைய நடப்பது நிதர்சனமாகும். ஆக, இவற்றை களைய ஒரு ஆக்ககரமான மற்றும் முழுமையான திட்ட வரைவு ஒன்றை நாம் வடிவமைப்பது அவசியமாகிறது. நம்பிக்கை கூட்டணியானது மேற்கூறிய அந்நிய குடியேறிகளின் சட்டவிரோத வருகையால் ஏற்படும் நான்கு (4) முக்கிய அச்சுறுத்தல்களை கண்டறிந்துள்ளது: […]

சபா மற்றும் சரவாக் பிரதேசங்களின் சுய ஆளுமையை பரவலாக்கம் மூலம் உறுதிசெய்தல்

அனைத்து முக்கிய முடிவுகளும் மையத்திலேயே எடுக்கப்படும் (Centralised Decision Making). இதன் விளைவாக, சபா மற்றும் சராவாக் பிரேதசங்களை உட்படுத்திய முடிவுகள், கொள்கைகள் யாவும் இப்பிரதேச மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அமைவதில்லை. இவ்வாறான ஒற்றை முடிவெடுக்கும் நிலையை மாற்றியமைத்து, மையத்தை பிரதானமாக கொண்டு விளங்கும் ஆளுமையையும் படிபடியாக அடிமட்ட நிலைகளிலிருந்தும் அரசு சேவைகளிலும் அகற்ற முற்பட வேண்டும். இதன் மூலமே நம்மால் பரவலாக்கத்தை நிறுவ முடியும் (Decentralisation). கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் சுய நிர்வாக உரிமை (Autonomy) […]

1963-ஆம் ஆண்டின் மலேசிய உடன்படிக்கையை (MA63) அமல்படுத்தி சபா மற்றும் சரவாக் பிரதேசங்களை வளப்படுத்துதல்

தீபகற்பம், சபா மற்றும் சராவாக்கின் பிரதேச சமத்துவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். நம்பிக்கை கூட்டணி 1963-ஆம் ஆண்டின் மலேசிய உடன்படிக்கை மற்றும் அரசாங்கங்களுக்கு இடையேயான செயலவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சபா மற்றும் சரவா பிரேதசங்களுக்கான சிறப்புரிமை மற்றும் சலுகைகளும் கிடைத்திட வழிவகை செய்யப்படும். இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் அரசியலமைப்பு சட்டம் 112C மற்றும் உட்பிரிவு 2(1), அமைப்பு IV, பத்தாம் அட்டவணையில் நிதர்சனமாக குறிப்பிடப்பட்டுள்ளது போல் 40% சபாவின் இயற்கை வளங்கள் அதனிடமே திருப்பியளிக்கப்படும். சரவாக்கை பொருத்தமட்டில், […]

தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியா இடையிலேயான முன்னேற்றத்தை சமநிலைப்படுத்துதல்

தீபகற்ப மலேசியாவை ஒப்பிடுகையில் சபா மற்றும் சரவா பிரேதசங்களின் வளர்ச்சி இன்னும் பிந்தங்கிய நிலையிலையே உள்ளது. நம்பிக்கை கூட்டணி இவ்விரு பிரேதசங்களுக்கு இடையேயான வளர்சி இடைவெளியை குறைக்கும் கடப்பாட்டை கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக சுகாதாரம் மற்றும் திறமைகளை ஊக்குவித்தல் கட்டாயம் இருக்கும். தேசிய நிர்வாக ஒருங்கிணைப்பு மன்றம் (Majlis Penyelarasan Pentadbiran Negara) தேசிய நிர்வாக ஒருங்கிணைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம் அதில் சபா மற்றும் சரவா பிரதேசங்களை உட்படுத்திய சுயாட்சி நிர்வாக அமைப்பு (agency) […]

பழங்குடியினர் நலன் காத்தல்

பழங்குடியின மலேசியர்களின் நலனில் பலர் இன்னும் அக்கறை கொள்ளவில்லை என்பதோடு மட்டுமில்லால் அவர்தம் எதிர்நோக்கும் சிக்கல்கள் யாவும் இன்னும் அரசால் களைய இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது. நம்பிக்கை கூட்டணி பழங்குடியின மலேசியர்களின் நலன் காக்கும் கடப்பாட்டினை, 13 செப்டம்பர் 2007 அன்று ஐக்கிய நாட்டு சபையால் ஏற்கப்பட்ட பழங்குடி சமூக உரிமைகளுக்கான பிரகடணத்தில் (UNDRIP) கூறப்பட்டுள்ள அறைகூவல்களை அடிப்படையாக கொண்டு பழங்குடியின சமுதாயத்தின் உரிமைகளையும் நலன்களையும் காத்திடும் என்பது நிதர்சனம். பழங்குடியினர் நிலங்களை பாதுகாத்தல் பழங்குடியின […]